முல்லைதீவு மாவட்ட காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கவயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று பதினொரு மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில்,

உள்ளக விசாரணையை நிராகரிக்கின்றோம் . காணாமல் போனோருக்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம் . காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் . - சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும் . 

கலப்புப் பொறிமுறை வெறும் கண்துடைப்பு , அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் கொடிய பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்