மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்த நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்தமையினால் நேற்று பிற்பகல் பொத்தானை அணைக்கட்டு இருபத்தைந்து அடியில் உடைப்பெடுத்தமையினால் பொத்தானை பிரதேசத்திலுள்ள சுமார் ஐயாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்று முழுதாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அணைக்கட்டு உடைப்பெடுத்தமையால் தற்போது வயல் நிலங்கள் ஆறு போன்று காட்சியளிப்பதுடன், நீரின் ஓட்டம் அதிவேகத்தில் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாக பொத்தானை கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாய நடவடிக்கைக்காக பொத்தானை பகுதிக்கு சென்று திரும்பி வரமுடியாமல் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை முப்படையினரின் உதவியுடன் படகுகள் மூலம் கொண்டுவரும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
அத்தோடு புணாணை அணைக்கட்டின் பத்து வான் கதவுகள் 12 அடிக்கு திறக்கப்பட்டு காணப்படுகின்றது. இதன் காரணமாக பல கிராமங்களுக்கு வெள்ள நீர் செல்லும் நிலைமை காணப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM