“ நோர்மல் என்றால் 5000 வரும் அதி உச்சம் என்றால் 8000 ஆகும்” - தாய்­ மசாஜ் என்ற பெயரில் விபசாரம்  

Published By: Priyatharshan

04 Jun, 2016 | 11:45 AM
image

“மசாஜ்” அல்­லது நீவுதல் சிகிச்­சை­யென்­பது உடலின் பாகங்­களை கையாளல், தாங்­குதல், நகர்தல் மற்றும் அழுத்தம் கொடுத்தல் போன்ற முறை­களைப் பயன்­ப­டுத்தும் சிகிச்சை முறை­யாகும்.

ஒரு பகு­தியில் இரத்த அளவை அதி­க­ரித்து, உடல் தசை­களின் நெகிழ்ச்­சியை மேம்­ப­டுத்தி, திரவ தேக்­கத்­தினால் ஏற்­படும் வீக்­கத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்க இந்த மசாஜ் சிகிச்சை முறை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. சில ஆய்­வு­க­ளின்­படி அழுத்தப் பண்­புகள் வளரும் ஆபத்­துள்­ள­வர்கள், மசாஜ் சிகிச்­சையைப் பெறு­வதால் அவ்­வாறு அழுத்­தப்­பண்பு வளர்ச்­சி­ய­டை­வது தடுக்­கப்­படும் என கூறப்­ப­டு­கி­றது.

இத்­த­கைய சிறப்பு சிகிச்­சைக்கு தாய்­லாந்து பிர­பல்­ய­மா­னது. அத­னாலோ என்­னவோ மசாஜ் என்ற சொல்­லுக்கு முன்­பாக தாய்­லாந்து நாட்டைக் குறிக்கும் வித­மாக ‘தாய்’ எனும் சொல்லைச் சேர்த்து ‘தாய் மசாஜ்’ என்ற சிகிச்சை முறை உல­க­ளவில் பிர­பல்யம் பெற்று வரு­கி­றது.

மசாஜ் என்­பது மேற்­கத்­தேய நாடுகள் மற்றும் தாய்­லாந்து போன்ற நாடு­களில் என்­னதான் புத்­து­ணர்ச்சி சிகிச்சை முறை­யாக நோக்­கப்­பட்­டாலும், அந்த சிகிச்சை முறை நட­வ­டிக்­கைக்குள் அடங்கும் நீவுதல் நட­வ­டிக்­கையை சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி “தாய் மசாஜ்” எனும் பெயரில் உடலை விற்கும் விப­சார கலா­சாரம் இலங்கை உள்­ளிட்ட தெற்­கா­சிய நாடு­களில் வியா­பித்­துள்­ளது.

இலங்­கையைப் பொறுத்­த­வரை ஆயுர்­வேத சிகிச்சை நிலையம், செலூன், ஸ்பா, தாய் மசாஜ் எனும் பல பெயர்­களில் மசாஜ் சிகிச்­சை­யளிப் பதாகக் கூறி, அதன் பேரில் பெயர்ப்­ப­லகை மாட்டிக் கொண்டு தடை செய்­யப்­பட்ட சட்ட விரோத விப­சார நட­வ­டிக்­கை­களில் அநேகர் ஈடு­ப­டு­கின்­றனர்.

உள்­நாட்டில் வறு­மையை காரணம் காட்டி தொழில் தேடும் இளம் பெண்­க­ளையும், தாய்­லாந்து,ரஷ்யா, உஷ்­பெ­கிஸ்தான், இந்­தியா, மலே­ஷியா உள்­ளிட்ட வெளி­நா­டு­களில் இருந்து அழைத்து வரப்­படும் விபசா­ரத்தை தொழி­லாகக் கொண்ட யுவ­தி­களை பயன்­ப­டு­த்தியும் இந்த சட்ட விரோத விப­சார வர்த்­தகம் பலரின் ஆசிர்­வா­தத்­துடன் ஜெய­மாக நடக்­கி­றது.

இது குறித்து பல வெளிப்­ப­டுத்­தல்­களை கேசரி, முன்­னைய நாட்­களில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது. கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை பகு­தியில் இயங்­கிய இத்­த­கைய சட்ட விரோத விப­சார விடு­திகள் தொடர்­பிலும் அதன் பின்­ன­ணியில் உள்ள அதி­கார வர்க்­கத்­தையும் அதில் நாம் தோலு­ரித்துக் காட்­டி­யி­ருந்தோம்.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணியில் தான் இந்­த­வாரம் முதலாம் திகதி தல­வத்­து­கொட பகு­தியில் மிக சூட்­சு­ம­மாக உள்­நாட்டு மற்றும் தாய்­லாந்து பெண்­களை வைத்து முன்­னெ­டுக்­கப்­பட்ட விப­சார வர்த்­தகம் முறி­ய­டிக்­கப்­பட்­டது.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் உள்ள வலான துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரிவின் பதில் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிர­சாந்­தவின் ஆலோ­ச­னைக்கு அமைய இந்த அதி­ரடி நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

தல­வத்­து­கொட பகு­தியில் நீண்ட நாட்­க­ளாக அனைத்து சர்ம நோய்­க­ளுக்­கு­மான சிசிச்சை வழங்­கப்­படும் எனும் சிங்­கள உப தலைப்­புடன் ஆயுர்­வேத சிகிச்சை நிலையம் எனும் பதா­தை­யுடன் சிகிச்சை நிலையம் ஒன்று நடத்­தப்­பட்டு வந்­தது.

Ayurvedic Beauty Care Treatment for skil kind of physical Element என தனது நட­வ­டிக்­கையை பிர­பல்யம் செய்த அந்த ஆயுர்­வேத சிகிச்சை நிலையம் தொடர்பில் யாருக்கும் பெரி­தாக சந்­தேகம் வர­வில்லை. இந்த ஆயுர்­வேத சிகிச்சை நிலை­யத்­தி­னுள்­ளேயே Selena SPA எனும் பெயரில் மசாஜ் நிலை­யமும் இயங்­கி­யது. எனினும் அங்கு மசாஜ் நட­வ­டிக்­கைக்கு மேல­தி­க­மாக மிக சூட்­சு­ம­மாக விப­சா­ரமும் இடம்­பெற்று வந்­தமை தொடர்பில் வலான துஷ்­பி­ரயோக தடுப்­புப்­பி­ரி­வுக்கு அண்­மையில் தகவல் கிடைத்­துள்­ளது.

இந்த தக­வ­லை­ய­டுத்து வலான துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரிவு, குறித்த மசாஜ் நிலை­யத்தில் உள்ள ஒரு­வ­ருடன் தொடர்பை ஏற்­ப­டுத்தி தம்மை பொலிஸார் என அடையா­ளப்­ப­டுத்­தாது நட்­பு­றவை வளர்த்­துள்­ளனர். இதற்­காக சில ஊட­க­வி­ய­லா­ளர்­களின் உத­வி­யையும் பெற்­றுக்­கொண்ட வலான துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரிவு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க ஆரம்­பித்­தது.

அன்று முதலாம் திகதி புதன்­கி­ழமை குறித்த ஆயுர்­வேத மசாஜ் நிலை­யத்தை சேர்ந்த தாம் நட்­பு­றவு வளர்த்த நப­ருடன் பொலிஸார் தொடர்பை ஏற்­ப­டுத்­தினர். அவ­ரது பெயர் திலின பிரதீப் என்ற பெய­ரி­லேயே பொலிஸார் தொடர்பை வளர்த்­தி­ருந்­தனர். அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யதும் திலி­னவே முதலில் "ஹலோ" என ஆரம்­பிக்க பிரதீப் என்ற பெயரில் இருந்த பொலிஸார் பேச ஆரம்­பித்­தனர்.

பிர­தீப்: ஹலோ திலின நான்.பிரதீப் கதைக்­கிறேன் எந்த நாட்­ட­வர்கள் உங்­க­ளிடம் இருக்­கின்­றனர்.

திலின: ரஷ்யன் ஒரு­வரும் தாய்­லாந்து இரு­வரும் உள்­ளனர்.

பிரதிப்: கட்­டணம் எப்­படி?

திலின : நோர்மல் என்றால் 5000 வரும் அதி உச்சம் என்றால் 8000 ஆகும்.

இந்த தொடர்­பா­டலைத் தொடர்ந்து கடு­வலை நீதி­வான நீதி­மன்றில் பெற்­றுக்­கொண்ட சோதனை அனு­ம­திக்கு அமைய பொலிஸார் தமது திட்­டத்தை ஆரம்­பித்­தனர்.

8000 ரூபாவைக் கொடுத்து மாறு­வே­டத்தில் இருந்த பொலிஸ் அதி­காரி தாய்­லாந்து பெண்­ணொ­ரு­வரைப் பெற்­றுக்­கொண்டார்.

இதன்­போது ஏற்­க­னவே கடு­வலை நீதி­வா­னிடம் பெற்றுக் கொண்ட சோதனை அனு­ம­திக்கு அமைய அங்­கி­ருந்த வலான துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரி­வினர் மசாஜ் நிலை­யத்தை சுற்றி வளைத்­தனர்.

இதன்­போது 18 வயது முதல் 38 வயது வரை­யான உள்­நாட்டு வெளி­நாட்டு யுவ­திகள் அங்கு இருந்­ததை பொலிஸார் அவ­தா­னித்­தனர். அவர்கள் விப­சார தொழிலில் ஈடு­ப­டுத்­தப்பட் டுள்­ள­மையும் விசா­ர­ணையில் பொலிஸார் தெரிந்து கொண்­டனர். 9 உள்­நாட்டுப் பெண்­களும் 3 வெளி­நாட்டுப் பெண்­களும் அதன் முகா­மை­யா­ளரும் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்­டனர்.

கலே­வெல, தம்­புள்ளை போன்ற தூர இடங்­களில் இருந்து வந்த உள்­நாட்டு பெண்­களே இவ்­வாறு தங்­கி­யி­ருந்து இந்த தொழிலில் ஈடு­ப­டு­வது தெரி­ய­வந்­தது.

கைதா­ன­வர்­க­ளிடம் விசா­ரணை நடத்­திய பொலி­ஸாரால் பல்­வேறு தக­வல்­களைப் வெளிப்­ப­டுத்திக் கொள்ள முடிந்­தது.

குறிப்­பாக இந்த மசாஜ் நிலை­யத்­துக்கு ஒரு நாளைக்கு ஆகக் குறைந்­தது 25 பேர் வரை வந்து சென்­றுள்­ளனர். பொலி­ஸா­ரையும் பொது­மக்­க­ளையும் சந்­தேகம் வரு­வதில் இருந்து தடுக்க வைத்­தியர் ஒரு­வரும் அங்கு சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அவர் மசாஜ் நட­வ­டிக்­கைக்கு முன்னர் இரத்த அழுத்­தத்தை மட்டும் சோதனை செய்­து­விட்டு நடிப்­ப­தாக விசா­ர­ணையில் தெரி­ய­வந்­தது.

அங்­கி­ருந்த உள்­நாட்டுப் பெண்கள் தூர இடங்­களைச் சேர்ந்­த­வர்கள். சிலர் திரு­ம­ண­மா­ன­வர்கள். நண்­பர்கள் ஊடா­கவே அவ்­வி­டத்­துக்கு வேலைக்கு வந்­த­தாக சிலர் கூறினர். இன்னும் சிலர் அங்­கு­வரும் வரை தான் என்ன வேலை செய்­யப்­போ­கிறோம் என்­ப­தையே அறி­யாது இருந்­துள்­ளனர். அவர்­க­ளது வீட்­டா­ருக்கோ அல்­லது உற­வி­னர்­க­ளுக்கோ இவர்கள் செய்யும் தொழில் என்ன என்­பது தெரி­யா­ம­லேயே இருந்­துள்­ளது. இவை­ய­னைத்தும் பொலிஸ் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

50 ஆயிரம் ரூபா மாதாந்த வாட­கையின் அடிப்­ப­டையில் பெறப்­பட்­டி­ருந்த இந்த கட்­ட­ட­மா­னது சிறிய அறைகள் பல ஏற்­ப­டுத்­தப்­பட்டு அத­னுள்­ளேயே மிக சூட்­சு­ம­மாக இந்த விப­சார நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக மிகவும் பழக்­க­மா­ன­வர்­க­ளுக்கே விபசார நட­வ­டிக்கை குறித்து பெண்கள் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கைதான யுவதி ஒருவர் விசா­ர­ணையில் தெரி­வித்த சில தக­வல்கள் வரு­மாறு,

பொலிஸ்: இங்கு வரும் வரை என்ன செய்­வது என தெரி­யாதா?

யுவதி: தெரி­யாது சேர்.

பொலிஸ்: இந்த வேலையை ஆரம்­பிக்கும் போது மனதில் சஞ்­சலம் ஏற்­ப­ட­வில்­லையா?

யுவதி: பயம் ஏற்­பட்­டது. எங்­க­ளையும் விட வயதில் குறைந்த இளை­ஞர்கள் இந்த இடத்­துக்கு எமது சுகத்தை தேடி வந்­தனர்.

பொலிஸ்: சிறு­வர்­க­ளுமா?

யுவதி: ஆம், பல மாண­வர்கள் அடங்­குவர்.

இந்­நி­லையில் கைதானோர் கடு­வலை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். மேல­திக விசா­ர­ணை­களை தொடங்­கு­கின்­றன.

அண்மைய நாட்களில் மசாஜ் நிலையங்கள் தொடர்பில் பல விரும்பத்தகாத தகவல்களை நாம் வெளிப்படுத்தினோம். குறிப்பாக வெள்ளவத்தை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட மசாஜ் நிலையத்தில் இருந்த தாய்லாந்து பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதும் அவரிடம் பலர் உறவு வைத்துக் கொண்டதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனை விட மசாஜ் நிலையங்களை நாடும் மாணவர்கள் அல்லது இளம் வயதுடையோரின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்வடைந் துள்ளது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் இன்று வியாபித்துள்ள மசாஜ் நிலையங்களை கண்காணிக்கவும் அதன் செயற்பாடுகளை வரையறை செய்யவும் உரிய நடைமுறைகளை ஏற்படுத்த சுகாதார அமைச்சு உடன் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் எதிர்காலம் மிக மிக மோசமாக அமைந்துவிடும்.

( எம்.எப்.எம்.பஸீர் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரிப்பதற்கு உரிமையில்லை

2023-05-31 16:56:52
news-image

நான்கு தசாப்தம் கடந்தும் நெஞ்சில் கொழுந்து...

2023-05-31 16:00:00
news-image

எரிந்தும் மாறாத இரட்டை லயம்

2023-05-31 15:12:31
news-image

கிழக்கு கரையில் இருந்து எங்களது குரல்

2023-05-31 14:24:50
news-image

Factum Perspective: தாய்லாந்து தேர்தல் -...

2023-05-31 11:43:39
news-image

புத்தகங்களையும் விட்டு வைக்காத சிங்கள பேரினவாதம்

2023-05-31 10:18:04
news-image

கனவுகள் சிதைக்கப்பட்ட புலம்பெயர் பணிப்பெண்கள்

2023-05-31 20:51:08
news-image

“உலக புகைத்தல் தடுப்பு தினம்”

2023-05-26 11:25:08
news-image

குப்பை மேடு, காட்டு யானை பிரச்சினைகளுக்கு...

2023-05-30 17:10:57
news-image

சட்டத்தரணியாக பணிபுரிந்த பெண்ணின் கரங்களில் ஆயுதம்...

2023-05-30 16:27:16
news-image

புதிய வீடு ஒன்றை வாங்கும் உங்கள்...

2023-05-31 10:30:16
news-image

குடியரசு தினம் தொடர்பான பிரதிபலிப்புக்கள்

2023-05-29 10:46:01