பண்டிகை காலங்களில் அரிசி, பருப்பு, மிளகாய் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களை கொள்வனவு செய்யும்போது விழிப்புணர்வுடன் இருக்குமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 10 நாட்க்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது மனித பாவனைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத அரிசி, பருப்பு, மிளகாய் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இது தொடர்பில் 760 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டும் உள்ளது.

இதேவேளை இது போன்ற நுகர்வோர் பாவனைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத வர்த்தக நிலையங்கள் தொடர்பில் அருகில் உள்ள பி.எச்.ஐ. அலுவலகத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை பதிவுசெய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.