குருணாகல், வாரியபொல சிறைச்சாலைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட  கைதி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

போகம்பறை சிறைச்சாலைக்கு அவர் இடமாற்றப்படுவதற்கு முன்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கைதி குருணாகல் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட கைதிக்கு துப்பாக்கி எவ்வாறு வந்தது என்பது தொடர்பான அறிக்கையொன்றும் உளவுத் துறையினரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சம்பவத்தின்போது பொலிஸாரால் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய மைக்ரோ ரக கைத்துப்பாக்கியொன்றும் கைப்பற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.