இலங்கை பாட­சாலை மாண­வர்­களில் தேசிய மற்றும் சர்­வ­தேச அளவில் சாதனை புரிந்த விளை­யாட்டு வீரர் மற்றும் வீராங்­க­னை­க­ளுக்­கான மைலோ வர்ண விருது வழங்கும் நிகழ்வு எதிர்­வரும் 10ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

பாட­சாலை வீர வீராங்­க­னை­களை ஊக்­கு­விப்­ப­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த வர்ண விரு­துகள் தற்­போது 24ஆவது தட­வை­யாக நடை­பெ­ற­வுள்­ளது. எதிர்­வரும் இந்த மாதம் 10ஆம் திகதி கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் பிற்­பகல் 2.00 மணி­முதல் நடை­பெ­ற­வுள்­ளது.

26 விளை­யாட்டு பிரி­வு­களில் மொத்தம் 352 வீரவீராங்­க­னை­க­ளுக்கான விரு­துகள் இதில் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. அது தவிர சிறப்பு விரு­து­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பாட­சாலை வர்ண விரு­து­க­ளுக்கு தொடர்ந்தும் 24ஆவது வருடமாக மைலோ நெஸ்ட்லே நிறுவனம் அனுசரணையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.