டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சில் விசேட ஆராய்ச்சி பிரிவொன்று அமைக்கப்படவுள்ளது. 

பாடசாலைகள் மற்றும் கட்டட நிர்மாண வளாகங்களில் டெங்கு நுளம்புகள்கூடுதலாக காணப்படுவதாக தெரியவந்தள்ளது.

இதனை கருத்திற் கொண்டு இந்த விசேட பிரிவுஸ்தாபிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருணஜயசேகர தெரிவித்தார்.

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான சுற்று நிருபங்களை  வீடமைப்பு, நிர்மாணத்துறைஅமைச்சின் ஊடாக அமுல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.