மட்டக்களப்பு ஓமாடியாமடு விகாரதிபதி மீது பொல்லால் தாக்குதல் நடத்திய மூவர் நேற்று (21) சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்குள்ளான மதகுரு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாழசை்சேனை பொலிசார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள எல்லைக் கிராமமான ஓமாடியாமடு சுதுகல ஆரன்ய சேனாச்சனிய விகாரையின் விகாராதிபதியான சுபத்தாலங்காரம கிமி சம்பவதினமான நேற்றுமுந்தினம் வெள்ளிக்கிழமை (20) இரவு விகாரையில் இருந்துள்ள நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினர் மதுபோதையில் விகாரைக்குள் புக முற்பட்டபோது அவர்களுடன் ஏற்பட்ட வாய்தர்க்கதின் போது விகாரதிபதி மீது குறித்த குழுவின் பொல்லால் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்
இதனையடுத்து இத் தாக்குதலில் படுகாயமடைந்த விகாராதிபதியை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து இந்த தாக்குதலை மேற் கொண்ட 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM