இலங்­கையில் முஸ்­லிம்­களின் சமூக இருப்­பின்­மீதும் அவர்­களின் அர­சி­ய­லின்­மீதும் எதிர்­கா­லத்தில் தொடுக்­கப்­ப­ட­வுள்ள தீவி­ர­வாத யுத்­தத்­துக்­கான முஸ்­தீபு உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லுடன் தீவி­ர­மா­யிற்று என்­பது வெளிப்­ப­டை­யான உண்­மை­. அதற்கு முன்னர் குறிப்­பாக உள்­நாட்டுப் போர் முடி­வுக்கு வந்­த­வு­ட­னேயே அவர்கள் மீதான தாக்­குதல் மற்றும் சுரண்டல் முயற்­சி­யா­னது சிறிது சிறி­தாக வளர்ந்­து­கொண்டே வந்­தது. சில பேரி­ன­வாத துற­வி­க­ளோடு சில அர­சியல்வாதி­களும் சேர்ந்து இதன் வளர்ச்­சிக்கு தூப­மிட்­டமை சர்­வ­தேசம் எங்கும் பிர­பலம்­பெற்ற சங்­க­தி­யாகும். 

இந்த நிகழ்ச்­சித்­திட்­டத்தில் அகப்­பட்­டுக்­கொள்­ளாது அம்­மக்கள் தப்பி ஓடிச்­செல்­லுதல் என்­பது நடை­முறைச் சாத்­தி­ய­மற்­ற­தா­கவே அமைந்­து­விடப் போகின்­றது. அந்த தாக்­குதல் சம்­ப­வ­மா­னது வெறும் ஓர் உள்­நாட்டுப் புர­ளி­யாக மாத்­தி­ரமே இருந்­தது என்­பது நகைப்­புக்­கு­ரி­ய­தே. அப்­படிக் கூறிக்­கொள்ளும் சிலர் தங்கள் அர­சியல் இருப்பை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள முயல்­கின்­றனர் அல்­லது புதி­தாக பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லுக்கு வரு­வ­தற்கு ஆயத்­த­மா­கின்­றனர் என்­பதே அதன் அர்த்­த­ம். அக்­கூற்­றா­னது இன்னும் சில­ருக்கு உண்­மை­போ­லவும் தோன்­றக்­கூடும். ஆனால், அது திட்­ட­மி­டப்­பட்ட வெளிவாரி சக்­தி­களின் உல­க­ளா­வி­ய­தா­ன­தொரு நிகழ்ச்­சி­நி­ரலின் இலங்­கைக்­கான ஓர் அலகு மாத்­தி­ர­மே­. 

ஏப்ரல் தாக்­குதல் முஸ்­தீ­புக்­கான வரை­படம் இஸ்­லா­மோ­பி­யாவை உரு­வாக்­கி­ய­வர்­களால் கணித அடிப்­ப­டையில் ஏற்­க­னவே வரைந்­தா­கி­விட்­டது. இலங்கை முஸ்­லிம்­களின் புலக்­காட்­சிக்கு தென்­ப­டாத இடங்­க­ளி­லி­ருந்தே அது திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. அதற்­கான வரை­ப­டத்­துடன் அதன் நீண்ட பாதையும் படி­மு­றையும் அச்­சொட்­டாக நிர்­ண­ய­மா­கி­விட்­டது. அந்த மக்­களை குறி­வைத்­துள்ள அது­பற்­றிய விட­யங்­களை பகி­ரங்­கப்­ப­டுத்­தாத சக்­தி­களால் ஏற்­க­னவே விவா­தித்து முடிவு செய்­யப்­பட்­டு­விட்­டது. அதன் அமு­லாக்கல் நட­வ­டிக்­கை­கள்தான் சன்­னஞ்­சன்­ன­மாக தற்­போது முன்­னேற்றம் கண்டு வரு­கின்­றன. அது சில உள்ளூர் வகை­மா­தி­ரி­க­ளைக்­கொண்டு பொம்­ம­லாட்டம் செய்­யப்­பட்ட ஒரு நிகழ்ச்­சித்­திட்டம் மாத்­தி­ரமே.

அந்த செயற்­திட்­டத்­துக்­கான சரி­யான தளமும் வியூ­கமும் மட்­டு­மன்றி செயற்­கை­யாக உரு­வாக்­கப்­பட்ட  சூழ்­நி­லை­களும் தற்­போது தெற்­கா­சி­யாவில் மிகக்­கச்­சி­த­மாக கைகூடி வந்­துள்­ளது. அதன் ஆகப்­பிந்­திய தெற்­கா­சிய உதா­ரணம் இந்­திய உப­கண்­டத்தில் தற்­போது அரங்­கேற்­றப்­பட்­டுள்ள குடி­யு­ரிமைச் சட்­ட­ம். இலங்­கையில் அந்த சமூகச் சூழ்­நிலை ஏற்­ப­டு­வ­தற்­கான சர்­வ­தேசப் பின்­ன­ணி­களைக் கொண்ட கார­ணங்கள் பற்­றிய அல­சலும் அறி­வூட்­ட­லுமே இக்­கட்­டு­ரையின் நோக்­க­ம்.

மேற்­கு­றித்த பயங்­க­ர­வாத திட்­டத்தில் மூன்று முக்­கிய சக்­திகள், சர்­வ­தேச ரீதி­யான ஓர் வலைப்­பின்­னலின் (International Network) ஊடாக ஒரு நேர்­கோட்டில் செயற்­பட்­டுக்­கொண்டிருக்­கின்­றன. அவர்கள் வரைந் ­தெ­டுத்த வரை­படம் பற்றி மக்­க­ளுக்­கி­டை­யி­லான பரந்­து­பட்ட அறி­வூட்­டலும் உணர்ச்­சிப் ­ப­டுத்­தலும் அவ்­வப்­பி­ராந்­திய மக்கள் கூட்­டத்தின் அறி­வியல், கலா­சாரம், பொருளில், சமூ­க­வியல், அர­சியல், வர­லாறு மற்றும் ஒழுக்­க­வியல் பின்­ன­ணி­க­ளுக்கு அமை­வாக திட்­ட­மிட்ட அடிப்­ப­டையில் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. முதலில் அந்த சங்­கி­லித்­தொ­டரில் கொழு­வப்­பட்­டுள்ள சக்­திகள் யார் யார் என்­பது பற்றி திட்­ட­வட்­ட­மாக நிரல்­ப­டுத்­தினால் அது புதிய ஆய்வு முயற்­சி­க­ளுக்கு உந்­து­சக்­தி­யாக அமைந்­து­விடும்.

தத்­து­வார்த்த ரீதி­யா­கவும் மரபு ரீதி­யா­கவும் முஸ்­லிம்­களை எதிரி மனோ­பா­வத்­துடன் கையாண்­டு­வரும் சர்­வ­தேச சக்­திகள் இதில் முத­லா­மி­டத்தைப் பிடித்­துள்­ளன. அவர்­கள்தான் சர்­வ­தே­சத்தை தங்­களின் அறி­வியல், தொழில்­நுட்பம் மற்றும் பொரு­ளி­யல்சார் அறி­வுப்­ப­லத்­துடன் பூரண கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்கும் சக்­தி­க­ளாவர். தங்­க­ளுக்­குள்­ளேயே பல்­வேறு புவிசார் அர­சியல் (Geo- - politics)முரண்­பா­டுகள் மற்றும் பொரு­ளா­தாரப் போட்­டிகள் இருந்­த­போ­திலும் உலக முஸ்லிம்  ராச்­சி­யங்­களை தங்­க­ளது பூரண கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ர­ வேண்­டிய சந்­தர்ப்­பங்­களில் அந்த வேறு­பா­டு­களை அடக்­கி­வா­சிக்க அவர்கள் பயிற்சி பெற்­றுள்­ளனர். அவர்­களை வல்­ல­ர­சுகள் என்றும் கரு­த­ மு­டியும். அவர்­கள்தான் வர­லாற்­றுக்­காலம் தொடக்கம் உலக வரை­ப­டத்­தி­லி­ருந்து இஸ்­லா­மிய நாடு­களை துடைத்­தெ­றிதல் என்னும் ஒற்றை இலக்கில் சிந்­தித்து வரு­ப­வர்கள். இன்று அவர்கள் தங்கள் இலக்கை நோக்­கிய இரட்டை வழியில் கவனம் செலுத்தி வரு­கின்­றார்கள். 

அவற்றுள் முத­லா­வது வழியை கடைப்­பி­டிப்போர் பொரு­ளி­யல்சார் தாக்­கு­தலில் ஈடு­ப­டு­ப­வர்கள். இந்த நோக்­கத்­துக்­காக தங்கள் நேரடிக் கட்­டுப்­பாட்டின் கீழுள்ள உலக கார்ப்­ரேட்­டு­களை இவர்கள் பயன்­ப­டுத்­து­கின்­றனர். இரண்­டா­வது வழியைக் கடைப்­பி­டிப்போர் இறை­யியல் (Theology) மற்றும் தத்­து­வார்த்த தாக்­கு­தலில் ஈடு­ப­டு­ப­வர்கள். 

மேற்­படி சக்­தி­களை புவிசார் அர­சி­யலில் மேற்­கத்­திய (Western) சக்­திகள் என்று பொது­வாக அழைக்­கலாம். இவர்­க­ளுக்குள் மேற்கு ஐரோப்­பியர் மற்றும் கிழக்கு ஐரோப்­பியர் என்ற புவி­யியல் வேறு­பாடு இருந்­தபோ­திலும் முஸ்­லிம்­களை விரட்­டி­ய­டித்தல் என்னும் அவர்­களின் பொது­வான எதிர்­பார்ப்பை கருத்­திற்­கொண்டு ஓர் அடிப்­ப­டை­வாத மெய்­யி­யலின் ஸ்தாப­கர்கள் அவர்­களை இயக்கி வரு­கின்­றார்கள்.

இரண்­டா­வது சக்தி புவிசார் அர­சி­யலில் மத்­தி­ய­கி­ழக்கு என்ற சுற்­று­வட்­டத்துள் உள்­ள­டக்கி  அழைக்­கப்­படும் யஹூ­திய சக்­தி­யாகும். தத்­து­வார்த்த அர்த்­தத்தில் அவர்கள் இஸ்­லா­மிய இறை­யி­யலின் புவி­யியல் அடிப்­ப­டை­யி­லான முற்­று­கைக்குள் (Geographical Siege)இருந்­தா­லும்­கூட அந்த முற்­று­கைக்கு மேலான ரா­ஜ­தந்­திர அடிப்­ப­டை­யி­லான ஒரு சக்­க­ர­வி­யூகத்தை மேற்­கத்­திய சக்­தி­களின் அர­வ­ணைப்­புடன் உரு­வாக்­கி­ய­வர்­க­ளாவர். தங்­களின் பூரண கண்­கா­ணிப்­பின்கீழ் மத்­தி­ய­கி­ழக்கு ஆட்­சி­யா­ளர்­க­ளையும் அவர்­களின் புல­மைத்­துவ ஆலோ­ச­கர்­க­ளையும் வைத்­தி­ருப்­ப­வர்­களே அப்­பி­ரி­வுக்குள் அடங்­குவர். 

அவர்கள் புவி­யியல் அடிப்­ப­டையில் சர்­வ­தேசம் எங்­கணும் சித­றி­வாழ்ந்­தாலும் அவர்­களின் இலக்கின் அடிப்­ப­டையில் தேசங்­க­ளுக்­கான எல்லைக் கோடு­களின் கட்­டுப்­பா­டு­களை மீறி ஒரு கட்­பு­ல­னாகா இழைக்குள் செயல்­ப­டு­ப­வர்கள். இரண்டாம் உலக யுத்­தம்­வரை நாடற்­ற­வர்­க­ளாக இருந்த அவர்கள் இன்று மத்­தி­ய­கி­ழக்கில் எல்லா நிலப்­ப­கு­தி­யையும் கப­ளீ­க­ரம் பண்ணும் யானைப்­ப­சி­யுடன் இயங்­கு­வது மட்­டு­மன்றி, உல­கப்­ப­டத்தின் ஒவ்­வொரு நாட்டையும் தங்­களின் சுண்­டு­வி­ர­லுக்குள் கட்­டுப்­ப­டுத்­திக்­கொண்டும்  இருப்­ப­வர்கள். 

மூன்­றா­வது பிரி­வினர் உலகின் கிழக்குப் பகு­தியில் காணப்­படும் பல்­வேறு புவி­யியல், தத்­துவம், உயி­ரியல், சமயம், கால­நிலை வேறு­பா­டு­களை தன்­ன­கத்தே கொண்ட மக்கள் தொகு­தி­யினர். இவர்கள் காலா­கா­ல­மாக மேற்­கூ­றிய வேறு­பா­டு­க­ளுக்குள் தங்­க­ளுக்­கி­டையே மர­பார்ந்த உட்­ப­கை­க­ளுடன் வாழும் மக்கட் தொகு­தி­யினர். 19ஆம் நூற்­றண்­டு­வரை மேற்­சொன்ன ஐரோப்­பி­ய­ரதும் அவர்­களின் மூக்­கணாங் கயிற்றை பிடித்­தி­ருப்­ப­வர்­க­ளதும் மூளைச்­ச­ல­வைக்கு அவர்கள் பெரு­ம­ளவில் உட்­பட்டு இருக்­கா­த­வர்­க­ளாயும் அதே­வேளை அறி­யாமை, வறுமை முத­லிய இலக்­க­ணங்­களைக் கொண்­ட­வர்­க­ளாயும் வாழ்ந்து வரு­ப­வர்கள். இவர்­களை எமது வச­திக்­காக கிழக்­கத்­திய (Eastern) கலா­சா­ரத்தில் இருப்­ப­வர்கள் என அழைக்­கலாம். 

இந்த கிழக்­கத்­திய கலா­சாரப் பிரி­வி­ன­ருள்ளும் இரண்டு வேறு­பா­டான அம்­சங்கள் காணப்­ப­டு­கின்­றன. அவர்­களுள் சிலர் ஐரோப்­பி­யரின் வெள்ளையர் என்ற கணிப்­புக்கு உட்­ப­டாத வெள்ளை நிறத்­த­வர்கள். கிழக்­கத்­தைய பண்­பான வறுமை, அறி­யாமை என்­பன ஓர­ள­வுக்­குத்தான் அவர்­க­ளிடம் மேலோங்கிக் காணப்­படும். இஸ்­லா­மோ­போ­பியா என்ற நவீன சதி­வ­லைக்­குள்ளே அவர்கள் மிக அண்­மை­யில்தான் இழுத்­து­வி­டப்­பட்­டுள்­ளார்கள். கிழக்கு ஆசியா எங்­கணும் இவ்­வ­கை­யான மக்­களை நாம் அடை­யா­ளம் ­காண முடியும். 

இவர்­களுள் இன்­னொரு பிரி­வினர் அந்த அந்த நாடு­களின் சுதந்­திரப் போராட்டம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் உரு­வாக்­கப்­பட்டு புதிய அகன்ற தேசி­ய­வாத சிந்­த­னை­யுடன் கள­மி­றக்­கப்­பட்­ட­வர்கள். ஒரு பாரிய அகன்ற பாரத கனவை ஒத்த கன­வு­க­ளுடன் தத்­த­மது நாட்டின் அதி­கார அர­சி­யலில் மிகுந்த செல்­வாக்குச் செலுத்தி வரு­ப­வர்கள். இவர்கள் முஸ்­லிம்­களை மட்­டு­மன்றி கிறிஸ்­த­வர்­க­ளையும் கூட துவம்சம் செய்யும் நோக்­குடன் கரு­நா­கங்­க­ளாக வலம்­வ­ரு­ப­வர்கள். 

இவ்­வி­டத்தில் மட்­டுமே இத்­த­கையோர் வெள்ளை ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளுடன் முரண்­பட்டுக் கொள்­கின்­றனர். அத்­த­கையோர் தத்தம் சொந்த நாடு­களில் பல­மான மத­வாத அரசு ஒன்றை உரு­வாக்கி, அதன்­மூலம் விதே­சிய சம­யத்­த­வர்­க­ளான கிறிஸ்­த­வர்­க­ளையும் முஸ்­லிம்­க­ளையும் அப்­பு­றப்­ப­டுத்தும் கன­வு­டனும் உலகின் வரை­ப­டத்­தி­லி­ருந்து முஸ்லிம் நாடு­களை இல்­லா­மல்­செய்யும் தீவிர குறிக்­கோ­ளு­டனும் இயங்கி வரு­ப­வர்­க­ளுடன் மிகுந்த தோழமை கொண்­ட­வர்கள்.

மேற்­படி மூன்று சக்­தி­களுள் முத­லிரு சக்­தி­களும் இரு­பதாம் நூற்­றாண்டின் பிற்­ப­கு­தி­யி­லி­ருந்து ஒரு முக்­கிய கண்­டு­பி­டிப்பை போர்த்­தந்­திர துறையில் கண்­டு­பி­டித்­துள்­ளன. அதா­வது முஸ்லிம் நாடு­களை உலகப் படத்­தி­லி­ருந்து விரட்­டி­ய­டிக்க தாங்கள் ஏற்­க­னவே கைக்கொண்ட அத்­தனை போர்த் தந்­தி­ரங்­களும் இறு­தியில் பெரும் தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­துள்­ளன என தற்­போ­தைக்கு அவர்கள் கரு­து­கின்­றார்கள். இத்­தோல்­விக்கு அடிப்­படைக் காரணம் மர­பு­ரீ­தி­யான போர் தந்­தி­ரோ­பா­யங்கள் என்­பதே இவர்­கள்தம் கண்­டு­பி­டிப்பு. தங்­களின் மர­பு­ரீ­தி­யான போர் தந்­தி­ரோ­பா­யங்கள் அவர்கள் அழிக்க நினைக்கும் மக்­களை ஒழிப்­ப­தற்குப் பதி­லாக, அவர்கள் மற்­று­மொரு வகையில் மீளெ­ழுச்சி காண சந்­தர்ப்­பத்தை அளித்து விடு­கின்­றது என்­பது அதன் விளக்­க­ம்.

இந்தத் ­தந்­தி­ரோ­பா­யங்கள் இறு­தியில் முஸ்­லிம்­களைப் பிரித்து ஓர­ளவு அழித்­தாலும் வேறொரு வழியில்  அவர்­களை சக்­திப்­ப­டுத்­தி­யுள்­ளன என்­பதே அவர்­களின் ஆய்­வு­களின் முடி­வாகும். அத்­தோடு வல்­ல­ர­சுகள் தங்­க­ளுக்­குள்ளே மோதிக்­கொள்­கின்ற சந்­தர்ப்­பங்­களில் முஸ்லிம் நாடுகள் மேலும் தங்­களை வளப்­ப­டுத்­திக் ­கொள்­கின்­றன என்­பதும் அவர்­க­ளது கணிப்­பாகும். 

அதற்கு உதா­ர­ண­மாக அவர்கள் குறிப்­பி­டு­வது அமெ­ரிக்கா என்ற வல்­ல­ரசு தனது எதிர் முகாமைச் சேர்ந்த மற்­று­மொரு வல்­ல­ர­சான சோவியத் யூனி­யனை துண்­டா­டு­வதில் பெற்ற வெற்­றி­.  இதன்­மூ­ல­மாக இஸ்­லா­மி­யர்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட பற்பல புதிய நாடுகள் தோற்றம் பெற்­றுள்­ளன. 

சோவியத் யூனி­யனின் வீழ்ச்­சி­யா­னது அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தி­யத்தின் வெற்­றிக்குப் பதி­லாக சர்­வ­தேச முஸ்லிம் நாடு­களை மேலும் சக்­திப்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதும் அவர்கள் கருத்­தாக இருக்கிறது. இது முஸ்­லிம்கள் மீண்டும் உது­மா­னிய சாம்­ராச்­சி­யத்தை நோக்கி தங்­களை ஆற்­றுப்­ப­டுத்த வழி­வகை செய்­துள்­ள­தா­கவே அவர்கள் கரு­து­கின்­றனர். இதன்­பொ­ருட்டு அவர்கள் கோடிட்டுக் காட்டும் ஆகப்­பிந்­திய உதா­ரணம் துருக்­கியின் புல­மைத்­துவ வழி­காட்­டலில் மலே­சியா, இந்­தோ­னே­சியா, கட்டார் முத­லிய நாடு­க­ளி­டையே அண்­மையில் ஏற்­பட்­டுள்ள கருத்­தியல் ஒரு­மைப்­பாடு. 

பெருந்­தே­சி­ய­வாத அடிப்­ப­டையில் சம­ப­லம்­கொண்ட மற்­று­மொரு வல்­ல­ரசை அவர்கள் வீழ்த்­தி­ய­போ­தி­லும்­கூட, அதனை ஒரு தற்­கொலை முயற்சி என்றே அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தியம் தற்­போது கரு­து­கின்­றது. 

எனவே, முஸ்லிம் வல்­ல­ரசு ஒன்று இந்த நூற்­றாண்­டில்­கூட ஏற்­ப­டாமல் தடுக்­க­வேண்டின், மரபு ரீதி­யான யுத்த முறைகள் தவிர்க்­கப்­ப­ட­வேண்டும் என அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தி­யத்­துக்கு அதன் புல­மைத்­துவ ஆலோ­ச­கர்­களால் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும் அப்­ப­ரிந்­து­ரையில் முஸ்­லிம்­களை அவர்­களின் பல­வீ­னங்­க­ளுக்­குள்ளே பிர­யாணம் செய்தே வெற்­றி­கொள்ள வேண்டும். அதற்கு சிறந்­த­வழி அவர்­க­ளுக்­கி­டையே காணப்­ப­டு­கின்ற முக்­கிய ஆன்­மீக மற்றும் கலா­சார வேறு­பா­டு­க­ளுக்கு ஊடாக அவர்­க­ளுக்­கி­டையே புதிய வன்­மங்­களை வளர்த்­து­விட வேண்டும் என்றும் தற்­போது பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. 

அத்­தோடு ஒரு தொடர்ச்­சி­யான தகவல் தொடர்­பாடல் யுத்­தத்­தையும் முஸ்லிம் நாடு­க­ளுக்­கி­டையே சீரிய முறையில் கொண்டு நடத்­த­வேண்டும். அப்­போ­துதான் முஸ்­லிம்­க­ளி­டையே ஒரு சிந்­தனைக் குழப்­பத்தை உரு­வாக்கி அதன்­மூலம் ஒரு கருத்­தியல் பல­வீ­னத்தை அவர்­க­ளி­டையே வளர்த்­துச்­செல்ல முடியும்.

அவர்­களின் இந்தக் கண்­டு­பி­டிப்­புக்கு 1979 பெப்­ர­வ­ரியில் ஈரானில் நிகழ்ந்த இஸ்­லா­மியப் புரட்சி மேலும் உத்­வே­கத்தை அளித்­தது. அமெ­ரிக்­கா­வுக்கும் அதன் அடி­வ­ரு­டி­யான ஷா மன்­னர்­களின் இஸ்­லா­மிய விரோத கேடு­கெட்ட ஆட்­சி­மு­றைக்கும் எதி­ராக முழு ஈரா­னுமே புதி­யதோர் புரட்­சி­யின்பால் அப்­போது ஈர்க்­கப்­பட்­டி­ருந்­தது. அதன் போராட்டம் ஆன்­மீகத் தலை­மை­யான இமாம் ஆய­துல்லாஹ் கொமெய்­னியின் ஆகர்­ஷிப்­புடன் மக்கள் புரட்­சி­யா­க மட்­டு­மன்றி இஸ்­லா­மிய அரசைத் தோற்­று­விப்­ப­தற்­கான புரட்­சி­யா­கவும் மாற்­றப்­பட்­டது. ஷா மன்­னரின் இந்த தோல்­வி­யையும் ஆட்சிக் கவிழ்ப்­பையும் அமெ­ரிக்­காவும் மற்றும் பன்­னாட்டு யஹூ­திய ஊட­கங்­களும் தங்­களின் தோல்­வி­யா­க­வுமே கரு­தின.

சோவியத் யூனி­யனின் வீழ்ச்சி ஒரு­பு­றமும் ஈரா­னிய இஸ்­லா­மிய புரட்­சியின் எதிர்­பா­ராத வெற்றி  மறு­பு­றமும் அமெ­ரிக்­கா­வையும் அதன் நேச­நா­டு­க­ளையும் கிலி­கொள்ளச் செய்­தது. இதனால் பழைய பனை­யோ­லையை சுருட்டி எறிந்­து­விட்டு புத்­தம்­பு­திய தந்­தி­ரோ­பா­யங்­களை கடைப்­பி­டித்­தாக வேண்­டிய நிர்ப்­பந்தம் அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டது. இதனால் ஆரம்­பத்தில் புதி­யதோர் தந்­தி­ரோ­பாய பாய்ச்­சலை அவர்கள் முஸ்­லிம்­கள்­மீது ஏவி­விட்­டனர். 

இஸ்­லா­மியப் புரட்சி என்ற புதிய நாமத்­துடன் ஏகா­தி­பத்­தி­யத்தின் ஏவல்­களை விரட்­டி­ய­டித்த சக்­தி­மிக்க மாற்­றத்­துக்குப் பெரும்­பா­லான முஸ்லிம் நாடு­களில் வாழ்ந்த மக்கள் ஒரு கருத்­தியல் ரீதி­யான அங்­கீ­கா­ரத்தை அந்­தக்­கட்­டத்தில் வழங்­கினர். 

மட்­டு­மன்றி அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தி­யத்­துக்கு எதி­ரான நாடு­களும் மற்றும் உல­கெங்கும் சிறு­பான்­மை­யி­ன­ராகச் சித­றி­வாழும் நாடு­களில் ஆங்­காங்கே தோன்­றிய இஸ்­லா­மிய புல­மைத்­துவ அறி­ஞர்­களும் இது­பற்­றிய உடன்­பா­டான ஓர் அபிப்­பி­ரா­யத்­தையே கொண்­டி­ருந்­தனர். (இஸ்­லா­மியப் புரட்சி அதன் எதி­ரி­களால் ஷீஆ புரட்சி என அழைக்­கப்­பட்­டதும் பல ஈரா­னிய குடி­மக்­களால் அது அர­பி­க­ளுக்கு எதி­ரான பார­சீக தேசியப் புரட்­சி­யாக மாத்­திரம் கரு­தப்­ப­டு­வதும் பின்­னாளில் தோன்­றிய துர்ப்­பாக்­கி­ய­மான நிகழ்­வுகள்) எனினும் ஈரா­னியப் புரட்­சி­யானது ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளுக்கு மிகுந்த ஏமாற்­றத்­தையே அழித்­தது. அதன் உட­னடி விளை­வா­கவே அவர்­க­ளுக்­குள்ளே அவர்­களை மோத­விடல் எனும் யுக்தி ஈரான் - ஈராக் யுத்­தத்­துடன் ஏலத்­துக்கு வந்­தது. 

பிராந்­திய வல்­ல­ரசுக் கன­வு­க­ளுடன் நடை­ப­யின்ற ஈராக் ஆட்­சி­யா­ளரின் கண்­களை இஸ்­லா­மியப் புரட்சி ஒன்று உலகில் ஏற்­பட்டே ஆக­வேண்டும் என்ற சிந்­தனை ஒரு திரிபுக் காட்­சி­யா­கவே தோன்­றிற்று. எனினும் ஏகா­தி­பத்­தி­யத்தின் அனு­ச­ர­ணை­யுடன் ஈரான்­மீது ஈராக்­கினால் தொடுக்­கப்­பட்ட தாக்­குதல் ஈரானின் நெஞ்­சு­ரத்­தினால் படு­தோல்­வி­யையே கண்­டது. ஆனால் ஏகா­தி­பத்­தி­யத்­துக்கு கிடைத்த ஆதாயம் இரண்டு நாடு­க­ளிலும் ஏற்­பட்ட பாரிய உயிர் மற்றும் பொரு­ளா­தார அழி­வு­க­ளாகும். 

ஏகா­தி­பத்­தி­யத்தின் செல்­லப்­பிள்­ளை­யாக தொழிற்­பட்ட ஈராக்­கிய அதிபர் கால­கெ­தி யில் அதே ஏகா­தி­பத்­தி­யத்தின் வன்மம் மிக்க எதி­ரியாய் ஆக்­கப்­பட்டார். பின்­னாட்­களில் பார­சீக வளை­கு­டாவின் ஒரு பல­மிக்க சக்­தி­யாக வளர்ச்சி கண்ட ஈராக்­கிய அதி­பரை அழித்­தொ­ழித்த பின்­னர்தான் ஏகா­தி­பத்­தியம் நிம்­ம­தி­யாக மூச்­சு­விட்­டது. வளை­குடாவில் அவர்­க­ளுக்கு எதி­ரான ஒரு பல­மிக்க திரட்­சியை ஏகா­தி­பத்­தியம் மிகக்­க­வ­ன­மாக அணுகி சின்­னா­பின்னம் ஆக்­கி­விட்­டது.

இந்த தலைகீழ் விகிதம் சம­கால இஸ்­லா­மிய வர­லாற்றில் அமெ­ரிக்­கா­வையும் அதன் நேசத்­துக்­கு­ரிய முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்­லாத நாடு­க­ளையும் இஸ்­லா­மிய புல­மைத்­துவ அறி­ஞர்­களால் வகைப்­ப­டுத்தி உல­குக்கு வெளிச்­சம்­போட்டுக் காட்ட வழி­வ­குத்­தது. ஈரானின் இஸ்­லா­மியப் புரட்­சிக்கு எதி­ராக ஈராக்­கிய அதிபர் மூல­மாக தொடுத்த போர் தோல்­வி­ய­டைந்­ததன் பின்­னர்தான் அவர்கள் சகோ­ரத்­துவ முரண்­பா­டு­களை கூராக்­கு­வதில் முனைப்­புக்­காட்­டினர். 

பிற்­போக்­கு­வா­தி­களின் புல­மைத்­துவ அறி­ஞர்கள் இஸ்­லா­மிய இறை­யியல் பிரி­வு­க­ளுக்கு இடை­யி­லான வேறு­பா­டு­க­ளையும், இஸ்­லா­மி­யர்­க­ளாக இருந்தும் அவர்­க­ளுக்கு உள்ளே புரை­யோ­டிப்­போ­யி­ருக்­கின்ற புவி­யியல் மற்றும் இனத்­துவ அடிப்­ப­டை­யி­லான கலா­சார மற்றும் மர­புசார் வேறு­ப­ாடு­க­ளையும் பற்றி கணி­ச­மான ஆய்­வு­களை மேற்­கொண்­டனர். முஸ்­லிம்­க­ளி­டையே காணப்­பட்ட உயி­ரியல் மற்றும் நடப்­பியல்  வேற்­றுமை உணர்­வு­களை மேலும் கூராக்கி அதனை மாமிசப் பகை­க­ளாக மாற்றும் யுக்­தியை அந்த ஆய்­வு­களின் மூல­மாக மேற்­கு­லகு கையாண்­டது. 

ஆயத்­துல்லாஹ் கொமெய்­னியின் தலை­மை­யி­லான இஸ்­லா­மியப் புரட்சி நடைபெ­றும் ­வரை சவூதி அரே­பி­யாவும் ஈரானும் அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தி­யத்தின் ஒன்­று­பட்ட சேவ­கர்­க­ளா­கவே இருந்­தன. 

ஆனால், இஸ்­லா­மியப் புரட்­சியின் பின்னர் ஈராக்­கிய அதி­பரின் படை­யெ­டுப்பால் ஈரானை அசைக்க முடி­யாத நிலைமை தோன்­றி­ய­போது அரா­பி­க­ளுக்கும் பார­சீ­கர்­க­ளுக்கும் இடையில் காணப்­பட்ட கலா­சார வேறு­பாட்­டையும் இறை­யியல் ரீதி­யான ஷீஆ - ஸுன்னி வேறு­பாட்­டையும் தோண்­டி­யெ­டுத்து அவர்­களை மோத­விட்­டனர். கால­க்கெ­தியில் அந்த இரண்டு தரப்­பி­ன­ரி­டமும் அது நன்கு பற்­றி­யெ­ரிய ஆரம்­பித்­தது. இதனால் மேற்­கு­லகின் இரவு விடு­திகள் சந்­தோஷ கானங்­க­ளாலும் நுரை­கக்கும் பானங்­க­ளாலும் நிரம்பி வழிந்­தன. 

இந்த வெற்­றியின் பின்னர் இஸ்­லா­மிய நாடு­க­ளி­லுள்ள அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட பிற்­போக்கு சக்­தி­களின் முழு­மை­யான ஆத­ர­வுடன் இஸ்­லா­மிய இறை­யி­யலை அடிப்­ப­டை­யா­கக்­கொண்ட முஸ்லிம் நாடு­க­ளுக்­கி­டையே ஏகா­தி­பத்­தியம் தொடர்ச்­சி­யான மோதல்­களை திட்­ட­மிட்டு ஏற்­பா­டு­செய்து வரு­கின்­றது. அமெ­ரிக்க மற்றும் யஹூ­திய சக்­தி­க­ளுக்கு குற்­றேவல் செய்­து­வரும் சக்­தி­க­ளுடன் இந்த கைங்­க­ரி­யத்தை அவர்கள் கச்­சி­த­மாக அரங்­கேற்றி வரு­கின்­றனர்.  

அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட பிற்­போக்கு சக்­திகள் ஓர் இறை­யி­யல்சார் தத்­து­வார்த்த அடிப்­ப­டை­யி­லான சக்­திப்­ப­டுத்தல் என்ற போர்­வையில் உல­க­மெங்கும் இந்த வேற்­று­மைத்­தீயை முஸ்­லிம்­க­ளுக்­கி­டையே வளர்த்­து­விட பாவிக்­கப்­பட்­டன.

இதற்கு சர்­வ­தேச அர­சி­யலில் ஒரு பிற்­போக்கு நிலைப்­பாட்டைக் கடைப்­பி­டித்த ஆட்­சி­யா­ளர்­களும் மற்றும் அமெ­ரிக்க ஏகா­தி­பத்­தி­யத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு துணை­நின்ற சக்­தி­களும் தங்­களின் பெற்­றோ­லிய டொலர்­களை தாரா­ள­மாக செல­விட்­டன. அவர்­களின் பல்­க­லைக்­க­ழ­கங்கள் இந்த வேறு­பாட்டை அறி­வி­ய­லாக்கி ஏனைய நாடு­க­ளுக்கு பெற்­றோ­லிய டொலர்­க­ளுடன் கூடிய அவர்­களின் கருத்­தி­யலை ஏற்­று­மதி செய்­வதில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டன.

இத்­த­கைய கருத்­தியல் விதைப்பு காலக்­கெ­தியில் அறிவின் மென்­மை­யான உணர்­வு­களை புறந்­தள்­ளிய இறை­யியல் கடும்­கோட்­பாட்­டா­ளர்­களை இந்­தப்­பூமி எங்கும் உரு­வாக்­கிற்று. இவர்கள் மனித நாக­ரி­கத்தின்  குணங்­களை உத­றித்­தள்­ளி­ய­வர்கள் என்றும் இஸ்லாம் என்­பது ஒரு வக்­கி­ர­மான சிந்­த­னை­கொண்ட ஒரு மார்க்­க­ம் என்றும் ஓர் எண்ணம் ஏனை­யோரிடம் எளிதில் உரு­வா­ ­வ­தற்­கான கார­ணி­க­ளா­கி­விட்­டனர். இஸ்லாம் என்ற மார்க்­க­மா­னது மக்­களின் மென்­மை­யான உணர்­வு­களை கருத்­திற்­கொள்­ளாது ஒரு போர்க்­கு­ணம்­மிக்க, பழி­வாங்கும் இயல்­புள்ள,  ரத்­த­வெ­றி­கொண்ட ஒரு கருத்­தி­யலின் வழி­மு­றை­யாகும் என்று மாற்று மதத்­த­வர்­க­ளி­டையே ஒரு நிரந்­த­ர­மான அபிப்­பி­ரா­யத்தை அது உரு­வாக்­கிற்று. 

அத­னால்தான் இலங்­கையில் ஹிஸ்­புல்­லாஹ்­வையும் சஹ்­ரா­னையும் ஒற்றை நேர்­கோட்டில் வைத்­துப்­பார்க்கும் அறி­வியல் எழுச்­சியை இலங்­கையின் ஊட­கங்கள் செய்யத் தொடங்­கின. அந்த வெற்றி தந்த உற்­சா­கத்­தில்தான் ரவூப் ஹக்கீம் போன்ற புல­மைத்­துவ தலை­மை­க­ளைக்­கூட அவை இன்று கடும்­கோட்­பாட்­டா­ளர்­க­ளாக காட்ட முனைந்­துள்­ளன. 

ஒரு நூற்­றாண்­டு­கால அடி­மைத்­து­வத்­திற்கு எதி­ராக போரிடும் பலஸ்­தீ­னத்தின் அறப்­போ­ரா­ளி­க­ளையும் தற்­போது வேதப்­பள்­ளி­களில் வெடி­குண்டு வைக்கும் வக்­கிர புத்­திக்­கா­ரர்­க­ளையும் ஒரே புள்­ளியில் வைத்­துப்­பார்க்கும் போக்கை இஸ்லாம் அல்­லா­த­வர்­க­ளி­டையே சர்­வ­தேச ஊட­கங்கள் ஆழ­மாக விதைத்­து­விட்­டன. 

முஸ்­லிம்­க­ளி­டையே ஆங்­காங்கு இந்த வக்­கி­ர­புத்தி கொண்ட இறை­யி­ய­லா­ளர்­களை தோற்­று­வித்­து­விட்டு பின்னர் இஸ்லாம் பற்றி தப்­ப­பிப்­பி­ரா­ய­மான சிந்­த­னை­களை அவை சர்­வ­தே­ச­ ம­யப்­ப­டுத்­தி­யுள்­ளன. அது­வும்­கூட ஏகா­தி­பத்­தி­யத்­துக்கு நற்­பெ­யரை பெற்­றுக்­கொ­டுக்­கவே உத­விற்று. அத­னால்தான் இப்­ப­டிப்­பட்ட கடும் கோட்பாட்டாளர்களை அமெரிக்க ஏகாதிபத்தியமே முன்னின்று பிரசவித்துள்ளது என்று இஸ்லாமிய புலமைத்துவ அறிஞர்கள் கருதுகின்றனர்.

ஏகாதிபத்தியத்தின் இந்த முயற்சியின் அடுத்தகட்டமாக சிறுபான்மையாக கிழக்காசிய மற்றும் தெற்காசிய நாடுகளிடையே வாழும் முஸ்லிம்களை அவர்களின் அடையாளம் சார் அனைத்து விழுமியங்களையும் சிதைத்துவிடும் ஒரு கடும்போக்கு நடைமுறையை இந்தக்  கோட்பாட்டாளர்களைக் கொண்டு அரங்கேற்றியுள்ளனர். ஆரம்பத்தில் கபுறு (புதைகுழி) வணக்கத்தை ஒழித்தல் என்ற போர்வையில் வரலாற்று அடையாளங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இஸ்லாத்தின் எதிரிகளால் இதற்கும் ஒரு தத்துவார்த்த முலாம் பூசப்பட்டு மக்களிடையே குழப்பங்கள் தூண்டிவிடப்பட்டன. 

பின்னர்தான் இந்த வேறுபாடுகளின் ஆதாயங்களை அந்தந்த நாடுகளின் பேரினவாதிகள் கையில் எடுத்தனர். அந்த பேரினவாதிகள் பள்ளிவாசல்களை அழித்தல், அடையாள ஆடை அணிகலன்களில் கைவைத்தல், பொருளாதார மூலங்களை நிர்மூலமாக்குதல், அனுபவித்துவரும் ஆன்மீக மற்றும் கலாசார உரிமைகளில் நேரடியாக இடையூறுகளை உருவாக்குதல் முதலிய அனைத்து வழிவகைகளிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிடையே தற்போது வன்மத்துடன் தாக்குதல்களை தொடுக்கின்றனர். இந்தியா, சீனா, இலங்கை, மியன்மார் முதலிய நாடுகளில் இந்தப்போக்கு அந்தந்த நாட்டு மக்களின் கலாசாரம் தொடர்பான சர்வதேசப் பார்வைகளுக்கேற்ப மிகக்கச்சிதமாக மேடையேற்றப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழீழப் போராட்டத்தை ஒடுக்கிய பின்னர் ஏற்பட்ட உற்சாகத்தினால் இந்தப்போக்கு பேரினவாதிகளால் வகை தொகையற்று முடுக்கிவிடப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21இன் பின்னர் ஒரு கட்டத்தில் எல்லா முஸ்லிம் மக்களுமே பயங்கரவாதிகளாகவே பிறத்தியார்களால் பார்க்கப்பட்டனர். 

இயேசுநாதரை ஈஸா நபி எனக்கூறி, அவரை ஒரு தீர்க்கதரிசியாக நம்பிக்கை கொள்ளாதவன் முஸ்லிம் அல்ல என்பதே இஸ்லாமிய இறையியலாகும். இந்த நம்பிக்கையினால் கிறிஸ்தவ இறையியலை ஒரு சகோதர வாஞ்சையுடன் அணுகும் இஸ்லாமியர்களும் பழைய ஏற்பாட்டில் குறித்துரைக்கப்பட்ட சில கோட்பாடுகளால் இஸ்லாத்தை ஒரு சகோதர மார்க்கமாகப் பார்க்கும் கிறிஸ்தவர்களும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலால் ஜென்மவிரோதிகள் ஆக்கப்பட்டுள்ளனர். சஹ்ரானின் இந்த கடும் கோட்பாட்டை எந்த முஸ்லிமும் ஆதரிக்கவில்லை என்பதை கிறிஸ்தவ மார்க்கத்தின் தலைவர்கள் சிறிது சிறிதாக இப்போது ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். அதேபோல முஸ்லிம்களில் ஒரு சதவிகிதத்தினர்கூட இந்தக் கொடுமைக்கு ஆதரவில்லை என்பதும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. 

அப்படியானால் இந்த வன்முறையால் ஆதாயம் பெற்றவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணவேண்டியதே வன்முறையை விரும்பாத மக்களினதும் அரசுகளினதும் முதன்மையான கடமை. இந்தப் புள்ளியிலிருந்தே இந்த அழிவுக் கலாசாரத்துக்கு ஓர் அறிவுசார் முற்றுப்புள்ளியை வைக்கமுடியும்; வைக்கவும் வேண்டும்.