(எம்.மனோசித்ரா)

அனுமதிப்பத்திரமின்றி கடலட்டைகள் பிடித்த 7 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் நேற்று மன்னார் - வங்காலை கடற்கரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த ஏழுபேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கையில் கடல் வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே இந்த ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன் போது 984 கடல் அட்டைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும் 25 மற்றும் 40 வயதுடைய மன்னார் மற்றும் வங்காலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். 

இவர்களிடமிருந்து 3 மீன் பிடி படகுகளும் மேலும் சில மீன் பிடி இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடல்வள பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.