அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற அதிபார குத்துச்சண்டை வீரர் மொஹமட் அலி நேற்று வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளார்.

இந்த தகவலை மொஹமட் அலியின் குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.மொஹமட் அலி நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில்  சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்கள் அமெரிக்காவின் பொய்னிக்ஷ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த மொஹமட் அலி தனது 74 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

இவரது இறுதிக் கிரியைகள் அவரது சொந்த இடமான கென்டுக்கி லொய்ஸ்வில்லில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மொஹமட் அலி  மூன்று முறை அதிபார குத்துச்சண்டை  சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.