மத்­திய வங்­கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்­திரன் மீதான குற்றம் நிரூபிக்­கப்­ப­டாத நிலையில் அவரின் பத­விக்­கா­லத்தை நீடிக்கக் கூடாது என கூறு­வதில் எந்த நியா­யமும் இல்லை. இன­வா­தி­களின் கோரிக்­கை­களை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டாது என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி தெரி­வித்தார்.

மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ரனின் பத­விக்­கா­லத்தை நீடிக்­கக்­கூ­டாது என மஹிந்த அணி­யினர் தெரி­விப்­பது தொடர்­பாக வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில்,

மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்­திரன் மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பில் மோசடி புரிந்­துள்­ள­தாக எதிர்க்­கட்­சியில் இருக்கும் மஹிந்த அணி­யினர் ஆரம்பம் முதல் குற்றம் சுமத்தி வந்­தனர். அத்­துடன் இது தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் ஒன்றும் நடை­பெற்­றது. ஆனால் அவர்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் எதுவும் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை.

அத்­துடன் அர்ஜுன மகேந்­திரன் குற்றம் செய்­தி­ருந்தால் அவ­ருக்கு எதி­ராக வழக்கு தொடர்ந்­தி­ருக்­கலாம். அவ்­வாறு இல்­லாமல் அவர் சிறு­பான்மை இனத்­தவர் என்­ப­தற்­காக அவரின் பத­விக்­காலம் முடி­வ­டைந்த பின்னர் தொடர்ந்து ஆளுனர் பத­வியில் நீடிக்­க­வேண்டாம் என இவர்கள் கூறி­வ­ரு­கின்­றனர்.

மேலும் நாட்டில் தற்­போது கடந்த காலத்­தை­யும்­விட சமா­தானம், நல்­லி­ணக்கம் மற்றும் ஜன­நா­யகம் ஏற்­பட்­டுள்­ளது. இதனை பொறுக்க முடி­யா­த­வர்­களே இவ்­வா­றான கோரிக்­கை­களை முன்­வைத்து மீண்டும் நாட்டில் இன­வா­தத்தை தூண்­டு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர். இன­வா­தத்தை தூண்­டு­வதன் மூலமே இவர்­க­ளுக்கு அர­சியல் மேற்­கொள்ள முடியும்.

எனவே அர்ஜுன் மகேந்­திரன் மீதான குற்றம் நிரூபிக்­கப்­ப­டாத நிலையில் அவரின் பத­விக்­கா­லத்தை நீடிக்க கூடாது என கூறு­வதில் எந்த நியா­யமும் இல்லை. ஜனா­தி­பதி மற்றும் ம் பிரதமர் அவரின் பதவிக்காலத்தை நீடிக்கலாம் அல்லது விட்டுவிடலாம். ஆனால் இனவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தீர்மானம் எடுக்கக்கூடாது என்றார்.