மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்குளத்தில் நேற்று  மாலை (21) ஏற்பட்ட பாரிய வீதிவிபத்தில் மாணவன் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பிறிறிலிருந்து ; வாழைச்சேனை நோக்கிச் சென்ற தனியார் பஸ் வண்டியின் பின்பகுதியில் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள்  கொழுவியதால் நீண்டதூரம்  இழுத்துச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளை பஸ் இழுத்துச் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் கடுக்காமுனை கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ரகுநாத் அமரநாத் என்ற 20 வயது பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் தடயவியல் பொலிசார் ஆகியோர் தீவர விசாரணைகளை மேற்கொண்டனர்.

பலியான மாணவரின் சடலம் மட்டக்களப்பு போதனா iவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்.காத்தான்குடி பொலிசார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.