சம்பிக்கவை கைதுசெய்தபோது பின்பற்றிய நடைமுறைகள் எவை? ; பதில் பொலிஸ் மா அதிபரிடம்  அறிக்கை கோரிய தேசிய பொலிஸ் ஆணைக் குழு!

22 Dec, 2019 | 11:40 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டபோது , பின் பற்றப்பட்ட நடைமுறைகள் எவை என்பதை உள்ளடக்கி விரிவான அறிக்கை ஒன்றினை தமக்கு அளிக்குமாரு தேசிய பொலிஸ் ஆணைக் குழு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளது.  

பாராளுமன்ற உறுப்பினரொருவர் கைது செய்யப்படுவாராக இருந்தால் அதற்காக வழமையான பின்றப்படும் நடவடிக்கை எதுவும் முறையாக பின்பற்றப்படாமல் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  சம்பவம் தொடர்பான அறிவித்தல் கைது செய்யப்பட்டதற்கு அடுத்த நாளே தனக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி  பொலிஸ் ஆணைக் குழுவுக்கு முறையிட்டு அது தொடர்பில் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து அவதானம் செத்துமாறு கோரியிருந்தார். 

இந் நிலையிலேயே அதன் முதல் கட்டமாக தேசிய பொலிஸ் ஆணைக் குழு, பதில் பொலிஸ் மா அதிபரிடம் இந்த  விளக்காத்தை கோரியுள்ளது.

முன்னதாக இவ்விடயம் தொடர்பில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் கே. டபிள்யூ.ஈ.கரலியத்தவுக்கு கடந்த  வெள்ளிக்கிழமை கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார்.

அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

பாராளுமன்ற உறுப்பினரொருவர் ஏதேனுமொரு குற்றத்துக்காக கைது செய்யப்படுவதாக இருந்தால், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவர்களின் சலுலைககள் வரப்பிரசாதங்களைப் பாதுகாப்பதைப் பின்பற்றி அவர்களை கைது செய்யும் நடைமுறையே இதுவரைக் காலமும் பின்பற்றப்பட்டு வருகிறது.

கடந்த 18 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்கவை கைதுசெய்வதற்காக அவரது இல்லத்துக்குச் சென்றிருந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நந்தன , மாலை 6.57 மணியளவில் தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு விடயம் தொடர்பில் தெரியப்படுத்தினார்.

அதன் பின்னர் மாலை 7.26 மணியளவில் நுகேகொடை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பெர்னாண்டோ பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்ததாகவும், அது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிப்பதாகவும் எனக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு தெரியப்படுத்திய ஆவணத்தின் பிரதி கடந்த  வியாழக்கிழமை (19) ஆம் திகதி பிற்பகல் 3.24 மணியளவில் எனக்கு கிடைக்கப் பெற்றது.

எனவே சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்ட போது வழமையாக பின்பற்றப்படுகின்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று நான் நம்புவதோடு, இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் இந்த கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுக்கின்றேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47