இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லையெனவும் ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கையில்

பீஜ்னோரில் 2 பேரும், சம்பல், பிரோசாபாத், மீரட், கான்பூர் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு நாங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது துப்பாக்கி பிரோயகம் மேற்கொள்ளவில்லை , ஆர்ப்பாட்டக்காரர்கள் தரப்பிலிருந்து துப்பாக்கி பிரயோகம் நேர்ந்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

அத்தோடு ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.