நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயை தடுப்பதற்கு  சிறந்த செயற்திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் அதன் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்று தெரிவித்த சுகாதாரம் ,பெண்கள் மற்றும் சிறுவர்கள் சமூக பாதுகாப்பு  மற்றும் ஊட்டச்சத்து சுதேச மருத்துவத்துறை அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இதை குறைக்க  முடியும் என்றும் தெரிவித்தார்.

டெங்கு நோயின் தாக்கம் பற்றியும் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றி இன்று சுகாதார அமைச்சில்  தலைமையில்  இடம்பெற்ற  கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன் போது உரையாற்றிய அமைச்சர் டெங்கு ஒழிப்பு  ஒரு நபரின் அல்லது ஒரு அரசாங்கத்தின்  கடமை அல்ல அதனை மேற்கொள்வதற்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

தங்களின் சுற்றுப்புற சூழல் மற்றும் தாம் வேலை பார்க்கும் பொது இடங்கள் என்பவற்றில் நீர்தேங்கும் இடங்களை நீர்த்தேங்க விடாமல் சுத்தமாக  வைத்திருப்பதற்கு துணை செய்ய வேண்டும். உயிராபத்தை ஏற்படுத்த கூடிய நோய் என்பதன் காரணத்தினால் நாட்டு மக்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதனை கருதில் கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்புடன்  செயற்பட வேண்டும் என்று அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கேட்டுக்கொண்டார்.

மழை யுடனான காலநிலை காரணமாக  நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தாக்கத்தை தடுப்பது பற்றியும் டெங்கு நோயில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது பற்றியும் தொலைக்காட்சி,வானொலி, மற்றும் பத்திரிகைகளில் டெங்கு நோய் பற்றிய அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்குவது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

பொது இடங்கள் மற்றும் பாடசாலைகளில் டெங்கு பரவும் படியான இடங்கள் தொடர்பிலும் கவனம்  செலுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் அனுர ஜயசேகர முதற்கட்டமாக பொது இடங்களில் மற்றும் தனியார் இடங்களிலும்  நீர் தேங்கும் பகுதிகளை இல்லாதொழிக்க வேண்டும்.

இதன் மூலம் டெங்கு பரவுவதை முதற்கட்டத்திலேயே இல்லாதொழிக்க முடியும்.  மக்கள் இவ் வேலைத்திட்டங்களுக்கு எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் வேண்டும்.