இளவயதினர் மற்றும் மத்திம வயதினர் வேலைப்பளுவுடன் பணியாற்றி வருகிறார்கள். உடற்பயிற்சி செய்வதற்கும், நடைப்பயிற்சி செய்வதற்கும் நேரம் கிடைப்பதில்லை. அத்துடன் கணினி முன் அமர்ந்து பணியாற்றும் நேரமும் அதிகம் என்பதால் இவர்களின் கால் பகுதி அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. 

இந்நிலையில் இதிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்க, தற்போது அக்குபிரஷர் ரோலர் என்ற கருவி அறிமுகமாகி நன்கு பலனளித்து வருகிறது.

உடல் மற்றும் மன நல சிக்கலுக்குள்ளானவர்கள் இந்த கருவியை பயன்படுத்தலாம். அதிக நேரம் நிற்பவர்களும். அதிக தூரம் நடப்பவர்களும். அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களும் இந்தக் கருவியை பயன்படுத்தி, தங்களது சோர்வை அகற்றிக் கொள்ளலாம். 

அத்துடன் தொற்றா நோய்களான நீரிழிவு நோய், இரத்த அழுத்த நோய் போன்றவற்றையும் வராமல் தடுக்கலாம். நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக வலியுறுத்தப்படும் உறக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் முதியோர்கள் இந்த கருவியை பயன்படுத்தலாம்.

இந்தக் கருவியை பாதங்களுக்கு அடியில் வைத்துக்கொண்டு, நாம் நாற்காலியில் அமர்ந்தபடி கால்களால், போதுமான அழுத்தம் கொடுத்து உருட்டும் போது, எம்முடைய உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. 

உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்குமான சக்தி ஓட்டப் புள்ளி மற்றும் பாதையின் தொடர்பு எம்முடைய பாதப்பகுதியில் அமைந்திருப்பதால் அங்கு இத்தகைய கருவிகளை இயக்குவதன் மூலம் தூண்டப்படுகிறது. உடலில் உள்ள உறுப்புகளில் சக்தி ஓட்ட பாதை மேலும் பலப்படுகிறது. இதனால் பலவீனமான சக்தி ஓட்ட பாதையில் உள்ள புள்ளிகள், தூண்டப் பெற்று அந்த உறுப்புகள் மீண்டும் இயங்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக இரத்தவோட்டம் சீராக நடைபெற்று, ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்படுகிறது.

சிலருக்கு பாதங்கள் மென்மையாக இருக்கலாம். அவர்கள் வைத்தியர்களை அணுகி, ஆலோசனைப் பெற்று, காலுக்கு தேவையான பிரத்யேக உறைகளை அணிந்து, இத்தகைய அக்குபிரஷர் ரோலர் என்னும் கருவியை பயன்படுத்தலாம் என வைத்தியர் சங்கர் தெரிவித்துள்ளார்.