ஒரு கிலோ கிராம் சம்பா மற்றும் நாட்டரிக்கான அதிகபட்ச சில்லறை விலையானது 98 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியானது.

இந் நிலையில் அதிக விலைகளில் விற்பனையாளர்கள் குறித்த அரசி வகைகளை விற்பனை செய்வதை தடுக்கும் வகையிலும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும் பொலிஸாருடன் இணைந்து நுவர்வோர் பாதுகாப்பு அதிகார சபை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினை இன்று முதல் ஆரம்பித்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே பொலிஸாரும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இணைந்து கொண்டுள்ளனர்.

அதன்படி குறித்த அரிசி வகைகளின் நிர்ணயிப்பு விலையை விட அதிகளவு விலைக்கு விற்பனை செய்யும் சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.