பதுளை - எல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்று இடிந்து விழுந்ததில் அதில் தங்கி இருந்த 3 வெளிநாட்டவர்கள் காயமடைந்து தெம்மோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் அவுஸ்திரேலியா சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இடிந்து விழுந்த கட்டடம் குறித்து ஆராய்வதற்காகக் கொழும்பிலிருந்து கட்டட ஆய்வுப் பணிமனையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று அங்குச் செல்லவுள்ளது. 

குறித்த கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் உரிய முறையில் இடம்பெற்றிருக்கவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் சந்தேகம் வெளியிட்டிருக்கிறது.