அவுஸ்திரேலியாவில் சிட்னி காட்டுத்தீயை (bushfires) அணைக்க போராடி வரும் இரண்டு தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா கிழக்கு பகுதிகளில் பல வாரங்களாக காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகிறது, இதனால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், மற்றும் 700 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஹெக்டேர் நிலம் (3 மில்லியன் ஏக்கர்) அழிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டபோது, தீயணைப்பு வீரர்களின் லொரி ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், சாரதியும்  தியணைப்பு விரரும்  உயிரழந்ததோடு மூன்று பேர் காயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரழந்தவர்கள் 36 மற்றும் 32 வயதை மதிக்கதக்க 19 மாதக்குழந்தைகளுடைய தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்களின் இறப்பு உறுதிசெய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, விடுமுறையை கழிக்குச் சென்ற அவுஸ்திரேலிய பிரமர் மோரிசன் தான் திரும்பி வருவதாகக் கூறி மன்னிப்பு கோரினார்.

"இந்த நேரத்தில் நான் குடும்பத்துடன் விடுமுறையில் சென்ற வேளை பயங்கரமான காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட  அவுஸ்ரேலியர்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்" என்று மோரிசன் கூறினார்.

இந்நிலையில்,சாதனை படைக்கும் வெப்ப அலைகளால் அவுஸ்திரேலியா நாட்டின் கிராமப்புறங்களில் வெப்பநிலை மிகவும் கடுமையாக ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீதிகள் உருக தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தென் அவுஸ்திரேலிய நகரங்களளில் வியாழக்கிழமை 50 செல்ஸியசை தொட்டது, நுல்லபார் சமவெளியில் 49.9 செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது மாநிலத்தின் வெப்பமான டிசம்பர் நாளாகும்.

போர்ட் அகஸ்டாவில், சில வீதிகள் குடியிருப்பாளர்களின் கண்களுக்கு முன்பாக உருகத் தொடங்கியது, இதனால் சாரதிககளுக்கு சிரமம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.