ஜப்பான், ஹொகய்டோ மாநிலத்திலுள்ள காடொன்றில் 7 வயது குழந்தையை விட்டுச்சென்ற பெற்றோருக்கு சட்டத்தின் படி கடுமையான தண்டணை வழங்கபடுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யமாடோ டனுகா என்னும் குறித்த குழந்தையானது ஒரு வாரத்திற்குப்பின் அந்நாட்டு பாதுகாப்புப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த குழந்தையின் பெற்றோர் தமது குழந்தை காட்டிற்னுள் தொலைந்து போய்விட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் பின் தாங்களே குழந்தையை காட்டிற்குள் விட்டு வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

இக்குழந்தையானது தற்போது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழந்தையின் பெற்றோருக்கு சட்டத்தின் படி கடுமையான தண்டணை வழங்கபடுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.