மொஸ்கோவில் உள்ள ரஷ்ய உளவுத் துறை தலைமையகமான எம்.எஸ்.பி. (Federal Security Service) கட்டடத்தின் நுழைவாயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களுள் ஒரு பொலிஸார் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவமானது அந் நாட்டு நேரப்படி இன்று மாலை 5.40 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது.

மூவர் கொண்ட குழுவொன்றை இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளது. இதன்போது பாதுகாப்பு அதிகாரிகளினால் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுடன், மற்றைய நபர் தலைமறைவாகியுள்ளார்.

அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.