இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உலக வங்கியானது 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கவுள்ளது.

குறித்த கடன் தொகையானது நகர்புறச்சேவைகள், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் சொத்துக்களை பாதுகாத்தல் போன்ற திட்டங்களுக்காக ஒதுக்கப்படவுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம், காலி மற்றும் கண்டி போன்ற நகரங்களில் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதற்காக குறித்த தொகை பயன்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக உலக வங்கியின் இயக்குநர் கருத்து தெரிவிக்கையில், 

குறித்த கடன் தொகையானது குறைந்த வட்டி வீதத்தில் 5 வருட தவணைக்காலம் உட்பட 25 வருட காலத்திற்குள் செலுத்தி முடிக்க கால அவகாசம்  வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம் குறித்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.