மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாதி ஒருவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேர் கொண்ட சரீரப் பிணையில் விடுவித்துள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணித்தாயொருவர் தனது முதலாவது பிரசவத்துக்காக கடந்த செப்டெம்பர் 28 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒக்டோபர் 2 ஆம் திகதி சுகப்பிரசவத்தில் பிரசவித்த சிசு இறந்துள்ளது.
இந்த சிசு இறந்து பிறக்க வில்லை என சிசுவின் தாய், தந்தை, உறவினர்கள் எனக் கூறி தமது குழந்தை இறந்ததற்கு காரணம் வைத்தியசாலை வைத்தியர் மற்றும் தாதியர் மீது குற்றம் சுமத்தி வைத்தியசாலைக்குள் இறந்த சிசுவுடன் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனையடுத்து அங்கு பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து இறந்த சிசுவை பொலநறுவை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார் .
இச் சம்பவம் தொடர்பாக பிரசவ அறையின் பெண் தாதியர் ஒருவரை செவ்வாய்க்கிழமை (17) திகதி பொலிசார் கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேர் கொண்ட சரீரப்பிணையில் விடுவித்து எதிர்வரும் ஜனவரி 29 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களான வைத்தியர் ஒருவர் மற்றும் இரு தாதியர் ஆகியோரை ஜனவரி 29 ம் திகதி நீதிமன்றில் அஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM