தென்னிலங்கையில் என்னை கைது செய்ய வேண்டும் என்று கூறுவது அவர்களுடைய உள்ளெண்ணங்களை படம்பிடித்துக் காட்டுகிறது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தங்களுடைய படங்கள் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தின் நிமிர்த்தமாக அவர்கள் இவ்வாறு நடந்துகொள்கிறார்களோ என்று என்னை எண்ண வைக்கின்றது.

ஆகவே இவ்வாறான கைதுகளும் என்னை விமர்சிப்பதும் தேவையற்றது என்று தான் நான் பார்க்கின்றேன். 

ஒருவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு விடயம் நான் வன்முறையைச் சார்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை. ஆனால் உண்மையை தொடர்ந்து நான் கூறிக்கொண்டு தான் வருவேன் என்நார்.