சம்பிக்கவின் கைது பாராளுமன்ற பாரம்பரியங்களை மீறும் செயல் - சபாநாயகர்

Published By: Vishnu

19 Dec, 2019 | 05:51 PM
image

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கைதானது கவலையளிப்பதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த கைதானது பாராளுமன்ற உறுப்பினர்களை கைதுசெய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய பராம்பரியங்களையும், சிறப்புரிமைகளையும் மீறியுள்ளதாகவும் சபாநாயகர் கருஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்வதற்கு முன்பதாக அதுகுறித்து சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் சம்பிக்க ரணவக்கவின் இல்லத்திற்குள் நுழைந்த பின்னரே பிரதி சபாநாயகருக்கு இவ்விடயம் தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்டதாகவும் சாபாநயாகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் முதன்மையானவர் என்ற ரீதியில் சபாநாயகர் பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்களை பாதுகாப்பவராவார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படுவாராக இருந்தால் அதற்காக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட யோசனை கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி 232/12 மற்றும் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி 234/6 ஹன்சாட்டில் அறிக்கையிடப்பட்டிருக்கிறது. 

தற்போதைய சபாநாயகர் கருஜய சூரியவினால் இந்த சம்பிரதாயம் இன்றும் பலப்படுத்தப்பட்டு முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அவர் சபாநாயகராக பதவி வகித்த காலம் முதல் தற்போது வரை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கு முன்னர் சபாநாயகருக்கு அறிவிக்கும் வழக்கமே பின்பற்றப்பட்டு வருகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38