யாழ்.மாவட்டத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான வைத்திய அறிக்கை பெறுவதிலுள்ள நெருக்கடிகளைத் தீர்க்க பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் துரித நடவடிக்கை முன்னெடுத்துள்ளார்.
வைத்திய சான்றிதழ் வழங்கும் இடத்திற்கு இன்று காலை விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அங்குள்ள நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன், வைத்திய சான்றிதழ் வழங்குவதைச் சுலபமாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
இதுவரை காலமும் வைத்திய சான்றிதழ் பெறுவதற்குப் பலர் பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர். அது குறித்து எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இதனடிப்படையில் இன்று காலை வைத்திய சான்றிதழ் வழங்கும் இடத்திற்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளேன்.
என்னுடன் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இன்று மாலை வைத்திய சான்றிதழ் வழங்கும் பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.
இந்த நடவடிக்கையினை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேற்கொள்ளவுள்ளது.
இதனைத் தொடர்ந்து வைத்திய சான்றிதழ் பெறுபவர்கள் வரிசையில் நிற்கவேண்டியதில்லை.
வைத்திய சான்றிதழ் தேவையானவர்கள் அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம், அதில் திகதியிட்டு கொடுக்கப்படும் அந்த திகதியில் வந்து வைத்திய சான்றிதழைப் பெறுவதற்கான சோதனைகளை மேற்கொண்டு குறுகிய நேரத்தில் வைத்திய அறிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை யாழில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான மருத்துவ அறிக்கையை வழங்குவதற்கு வைத்தியர்கள், ஆய்வுகூட உதவியாளர்கள், வைத்திய உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்களைப் புதிதாக நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள் ளோம். இதன் மூலம் நடைமுறை மேலும் இலகுவாக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM