ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றாமல் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது என்கிறார் பாக்கியசோதி சரவணமுத்து. யுத்த நடவடிக்கையின் போது இடம்பெற்றாதாக குறிப்பிடப்படும் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணி தமது கடமைகளை இன்னமும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். 

ஐ.நாவில் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அரசினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் வினவியபோதே, மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணியின் செயலாளருமான காலநிதி பாக்கியசோதி சரவணமுத்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

(எஸ்.ரவிசான்)