வளரிளம் பெண்களுக்கு மன அழுத்தத்தை தரும் மாதவிடாய்

Published By: Daya

19 Dec, 2019 | 03:53 PM
image

தற்போதைய பெண் பிள்ளைகள் ஆறாம் நிலையில் படிக்கும்போதே பூப்பெய்தி விடுகிறார்கள். ஆனால் பெற்றோர்கள் இதற்குப் பிறகு அவர்களை இது குறித்த விடயத்தில் தீவிரமாக அவதானிக்கத் தொடங்கிவிடுகிறார்கள் என வைத்தியர்கள் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். 

இதனால் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட திகதியிலிருந்து அவர்களிடம் இதுகுறித்த வினாவை தொடர்ச்சியாக எழுப்புகிறார்கள். இதனால் பிள்ளைகள் மனதளவில் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்திற்குள்ளாகிறார்கள்.

இதுகுறித்து வைத்தியர்கள்  தெரிவிக்கும்போது,

“ மாதவிடாய் ஆரம்பித்தது முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய் வருவது இயல்பானது. இதுகுறித்து பெற்றோர்களோ வளரிளம் பருவத்தில் இருக்கும் பெண்களோ அச்சப்பட தேவையில்லை. அதே தருணத்தில் பெற்றோர்கள் o'level மற்றும் ஏ லெவல் தேர்வில் அதிக பெறுபேறுகளை எடுத்து சித்தியெய்த வேண்டும் என்பதற்காக பிள்ளைகளுக்கு அதிக அளவில் மன அழுத்தத்தை தருகிறார்கள். 

பரீட்சை எழுதும் தருணங்களில் மாதவிடாய் வந்து விடக்கூடாது என்பதுதான் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஆனால் இதுகுறித்து உறுதியாக எதையும் தெரிவிக்க இயலாது.” என்கிறார்கள்.

“மாதவிடாய் ஏற்பட்ட தருணங்களில் பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்கள், அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், அதே தருணத்தில் அதிக கவனிப்பு  என்ற பெயரில்  செயற்பட்டால், அது அவர்களை மன அழுத்தத்திற்கு அழைத்துச் செல்லும். 

மன அழுத்தம் அதிகமானால், அவர்களின் உடலில் சுரக்க வேண்டிய ஹோர்மோன்கள் அதிக அளவில் சுரந்து, கருமுட்டை வளர்ச்சியை தடுக்கக் கூடும், இதன் காரணமாக மாதவிடாய் தாமதமாகலாம். இத்தகைய பாதிப்புக்குள்ளான பிள்ளைகளை வைத்தியர்கள் குறிப்பிட்ட ஹோர்மோன் சுரப்பு குறித்து பரிசோதனையை மேற்கொள்வார்கள். அதன்போது தைரொய்ட் ஹோர்மோன் சுரப்பு சீராக இருக்கிறதா என்பதையும் கவனிப்பார்கள். 

பிள்ளைகளும், துரித உணவுகளை தவிர்த்து, சரிவிகித சத்துணவை உட்கொள்ள தொடங்கினால், இத்தகைய பிரச்சினை ஏற்படாது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். மன அழுத்தம் இல்லாதிருந்தால் குறைந்தபட்சம் 90 நாட்களுக்குள் இயல்பாகவே மாதவிடாய் ஏற்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04