லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை  லோகி தோட்டத்திலிருந்து தலவாக்கலையில் உள்ள பிரத்தியேக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை பலாத்காரமாக கையை பிடித்து இழுத்து பாலியல் சேட்டை செய்ய முற்பட்ட 35 வயதுடைய இளைஞர் ஒருவர் லிந்துலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை இச்சம்பவம் தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் லோகி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது குறித்த சிறுமி சத்தம் போட்டதை அடுத்து பிரதேசத்தில் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட இளைஞனை தாக்கி மரத்தில் கட்டி வைத்து லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

அதனை தொடர்ந்து பொலிசார் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் . 

இதற்கு முன்னும் பல தடவைகள் குறித்த இளைஞன் பெண்களை பாலியல் சேட்டைகளுக்கு உட்படுத்த முயன்றதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.  

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் தலவாக்கலை - தெவிசிரிபுற   பிரதேசத்தைச் சேர்ந்தவன் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.