72 ஆவது சுதந்திர தினத்தை கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில்  கொண்டாட அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இன்று (19-12.-2019) நடைபெற்ற அமைச்சரவையின் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2020 ஆம் ஆண்டிற்கான கொண்டாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்ய பிரதமர் தலைமையில் அமைச்சரவை குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

71 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் முன்னிலையில் காலி முகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.