ஜப்பானின் 'All Nippon Airways' க்கு சொந்தமான போயிங் 767 மெக்ஸ் ரக விமானம் ஒன்று ஜப்பானிய நகரமான ஃபுகுயோகாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக கியோடோ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஃபுகுயோகா சர்வதேச விமான நிலையத்திலிருந்து டோக்கியோவின் ஹனெடா நோக்கி புறப்பட்ட குறித்த விமானம் ஒரு மணி நேரத்தின் பின்னர் மீண்டும் ஃபுகுயோகா விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளது.

விமானத்தின் இயந்திரத்தில் ஒன்று தீப் பிடித்ததன் காரணமாவே இவ்வாறு விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதன்போது விமானத்தில் 278 பேர் இருந்துள்ளதாகவும், அவர்களில் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை எனவும் ஃபுகுயோகா விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.