தமிழினத்தை வழிநடத்துகின்ற பொறுப்பு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு இதைத்தான் கடந்த 70 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் அந்த ஆணையை வழங்கி வருகின்றார்கள்.
இனத்தின் விடுதலைக்காக இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஜனநாயக ரீதியிலான பலபோராட்டங்கள் எமக்கு உதவிசெய்யும் இதற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா நல்லூர் இளங்கலைஞர்மண்டபத்தில் இடம் பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
இலங்கை தமிழரசுக் கட்சியின் 70 ஆண்டு என்பது பல போராட்டத்தின் மத்தியில் வந்த கட்சியாகும் தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனத்தால் உருவாக்கப்பட்ட இக் கட்சி தொடர்ந்தும் தமிழ் மக்களின் விடுதலைக்காக முன்னின்று செயற்படும். .
தந்தை செல்வாவின் வழியில் அவரது தீர்க்க தரிசனமான மாநாடுகள் தீர்மானங்கள் போராட்டங்கள் சிறையில் அடைக்கப்பட்ட வரலாறுகள் இன்றும் தொடர்கின்றது எங்களின் தலைவர்கள் காட்டிய தலைமைத்துவத்தின் வழியில் தொடர்ந்தும் செயற்படுவோம். தமிழ் மக்களின் விடுதலைக்காக பல இயக்கங்கள் ஆயுதம் எடுத்துப் போராடினார்கள் அதில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாகப் போரிட்டார்கள் 2002 ஆம் ஆண்டு அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கம் போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் கூட சர்வதேசம் பின்னால் நின்று செயற்பட்டது.
நாங்களும் தமிழீழ விடுதலைப்புலிகளும் மக்களின் விடுதலைக்காக வேறு வேறாகப் போராடினாலும் மக்களின் ஒன்றுமைக்காக விடுதலைக்காக வரலாற்றில் தவறுகளை விடாத வண்ணம் நாங்கள் சர்வதேச சமூகத்திற்கு விடுதலைப்புலிகளுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என்பதை எடுத்துரைப்போம் அதற்காகவும் செயற்பட்டோம் இத்தகைய விடையங்கள் யாருக்குத் தெரியும் இன்று தனித்தனிக் கட்சிகள் பல உருவாகின்றது.
பதவிக்காக இதனை உருவக்குகின்றார்கள். ஒற்றுமை என்று பேசுகின்றவர்கள் எங்களுடைய ஒற்றுமை பற்றி என்னத்தை அறிந்திருந்தார்கள் போர்க்காலத்தில் இல்லாத ஆபத்து இன்றைய சூழலில் காணப்படுகின்றது. ஒற்றுமை என்று பேசுகின்றவர்கள் கடந்த கால வரலாறுகளை எடுத்துப் பார்க்கவேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் வாதியாக இல்லாத ஒருவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் போராடியவர் இன்று ஜனாதிபதியாக வந்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நிதானமாக சரியான சந்தர்ப்பத்தில் முடிவினை எடுத்து இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு வேண்டும் எனக் கூறியது மட்டுமன்றி அதனை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்த சஜித் பிரேமதசவுக்கு வாக்களிக்கவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது. மக்களும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டு 87 - 90 வீதம் தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் என வாக்களித்திருந்தார்கள்.
சஜித் பிரேமதாஸ வெல்லாது விட்டாலும் வடக்கு கிழக்கு உட்பட மலையக மக்கள் ஒரு கொள்கைக்காக வாக்களித்திருந்தார்கள். எங்களுக்கு மட்டுமன்றி பலருக்கும் ஏக்கம் ஏமாற்றம் கோபங்கள் இருக்கின்றது எனினும் நாங்கள் நடுநிலைமையில் இருந்து தவறவில்லை. கடந்த நான்கு வருட காலமாக அரசாங்கத்துடன் இனங்கிச் செயற்பட்டாலும் அமைச்சுக்களைப் பெறுவதற்காக நாங்கள் அவ்வாறு செயற்படவில்லை.
வடக்கு கிழக்கு அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்பதற்காக அவ்வாறு நாங்கள் செயற்பட்டோம். தற்போது ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்துள்ளது. ஜனாதிபதியாக இருப்பவர் உணவளித்தால் எல்லாம் சரிவந்து விடும் எனக் கூறுகின்றார்.
அவருக்கு என்ன செய்யவேண்டும் என்பது தெரியாத நிலையில் இருக்கின்றார். எமது மக்களின் விடுதலைக்காக நாங்கள் தொடர்ந்தும் ஜனநாயக ரீதியில் போராடவேண்டும் கடந்தகால வரலாறுகளை பாடமாகக் கொண்டு நாங்கள் ஒன்றுபட்டு நிதானமாக செயற்பட்டு எமது இலக்கை அடைவதற்கு ஒன்றிணையவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM