இராஜகிரியவில் இயங்கி வந்த விவசாய அமைச்சை பத்தரமுல்ல தனியார் கட்டிடத்திற்கு மாற்ற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றைய அமைச்சரவையின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த அரசின் விவசாய அமைச்சின் கட்டிடத்திற்கு மாத வாடகை 21 மில்லியன் ரூபா செலவிட்டமை குறிப்பிடத்தக்கது.