தென்கொரியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட் தொலைப்பேசியான சம்சுங் (Samsung) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக செயல் துணை தலைவரை கைது செய்துள்ளதோடு,அவர்களுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் தலைவரான லீ சாங் ஹூன், நிர்வாகத்தின் செயல் துணைத் தலைவர் கங் கியூங் ஹூன் ஆகிய இருவரும் அந் நிறுவனத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக ஊழியர்களின் ஊதியத்தை குறைத்தல் , தொழிலாளர்களின் சங்கங்கள் என்பற்றை முற்றாக நிறுத்தும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அத்தோடு அவர்களை கைது செய்த பொலிஸார் அந்நாட்டின் சியோல் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையிலேயே அவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் 18 மாத சிறை தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.