(செ.தேன்மொழி)

சட்டவிரோதமான முறையில் மின்குமிழ்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவை கடற்பகுதியில் இன்று கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் மின்குமிழ்களின் வெளிச்சத்தை பயன்படுத்தியே இவர்கள் மீன் பிடியில் ஈடுப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அம்பலங்கொட பகுதியைச் சேர்ந்த 47 , 64 ஆகிய வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து மீன்பிடிபடகு , வெளியிணைப்பு மோட்டார் மற்றும் 8 எல்.ஈ.டீ மின்குமிழ்களும் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக காலி உப கடல்வள பணிப்பாளர் காரியாலயத்தில் ஒப்படைத்துள்ளனர்.