ஊடகத்துறை கற்கையை மேம்படுத்த பல்கலைக்கழக கல்லூரி விரைவில் நிறுவப்படும் : பந்துல

Published By: R. Kalaichelvan

18 Dec, 2019 | 08:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஊடகத்துறை கற்கையினை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழக கல்லூரி விரைவில் நிறுவப்படும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற நோக்கம் அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல் தொடர்பாடல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஊடகக்கல்வி மற்றும் இதழியல் டிப்ளோமா  கற்கையினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை பண்டாரநாயக்க  ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனநாயக நாட்டில் ஊடகத்துறை நான்காவது பிரதான துறையாக காணப்படுகின்றது. அரசியலுக்கு அப்பாற்பட்ட சேவையினை ஊடகங்கள் முன்னெடுப்பது ஊடக தர்மத்தினை  மதிப்பதாக கருதப்படும். இன்று இளம் தலைமுறையினர் பலர்  அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊடாக ஊடகத்துறை தொடர்பான பாடநெறியினை பூர்த்தி செய்து துறைசார் ரீதியில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

சர்வதேசத்தின் மத்தியில் செயற்பாட்டு ரீதியில் செல்வாக்கு செலுத்தும் ஊடகத்துறையில் காலத்தில் தேவைக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியமாகும். மேற்குலக நாடுகளில்  ஊடகத்துறை தொடர்பான கற்கை நெறிகள் தேவைக்கேற்ப விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் ஊடகத்துறை தொடர்பான கொள்கைகளில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தினால்  பல மாற்றங்கள் முன்னெடுக்கப்படும். இதற்கமைய  ஊடகத்துறைக்காக  பிரத்தியேக பல்கலைக்கழக  கல்லூரி நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை பெற வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இலவச  கல்வி பயனுடையதாக அமைய வேண்டுமாயின் அனைத்து மாணவர்களும் உயர்கல்வியினை பெற வேண்டும் என்ற ஜனாதிபதியின்  நோக்கம் அடுத்த வருடம் முதல் செயற்படுத்தப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு வந்தாறுமூலையில் மின்னல் தாக்கி விவசாயி...

2024-11-08 03:21:20
news-image

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை:...

2024-11-08 02:59:43
news-image

செல்வம் அடைக்கலநாதன் தலைவர் பதவியில் இருந்து...

2024-11-07 23:01:31
news-image

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு ஆளுனருடன்...

2024-11-07 21:36:56
news-image

கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள்...

2024-11-07 20:11:57
news-image

வென்னப்புவவில் துப்பாக்கிச் சூடு

2024-11-07 19:46:46
news-image

ஊடகங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன் அரசாங்கத்தால் முன்னோக்கிப்...

2024-11-07 17:00:16
news-image

கிழக்கை காப்பாற்ற வேட்டுமாயின் வடக்கு மக்கள்...

2024-11-07 19:27:48
news-image

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை நியமிக்காமல் மின்சார கட்டணத்தை...

2024-11-07 16:58:57
news-image

களுத்துறையில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி...

2024-11-08 06:03:24
news-image

காணாமல்போன பெண் சடலமாக மீட்பு!

2024-11-08 06:04:14
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2024-11-07 17:22:07