இந்தியா சென்னையில், பாடம் நடத்திய வகுப்பறையில் கைகளை பிளேடால் அறுத்தும், மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்லூரியின் முன்னாள் பேராசிரியை ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டவறாவார். சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியொன்றின் பேராசிரியையாக கடமையாற்றி வந்தவறே தனலெட்சுமி.

ஆனால் 5 வருடங்களிற்கு முன்பே பணியில் இருந்து நின்றுவிட்டார். இருந்தாலும் கல்லூரிக்கு அடிக்கடி வந்து செல்வதாக தெரிகிறது. இந்நிலையில், இன்று காலை முன்னதாகவே கல்லூரிக்கு வந்துள்ளார் பேராசிரியை  தனலட்சுமி. மாணவிகள், பிற ஆசிரியர்கள் யாருமே அப்போது கல்லூரியில் இல்லை.. தான் ஏற்கனவே வேலை பார்த்தபோது, பாடம் நடத்திய வகுப்பறைக்க சென்றுள்ளார். 

அங்கேயே அவர் தூக்கிட்டு தொங்கிவிட்டார்.  சிறிது நேரத்தில் மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைந்தனர். அப்போதுதான், தனலட்சுமி பேராசிரியர்  தூக்கில் தொங்கியதை கண்டு அலறினர்.. பேராசிரியையின் கையில் பிளேடால் அறுக்கப்பட்ட நிலையில், இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து பதறிகொண்டு ஓடிபோய் உடனடியாக நிர்வாகத்துக்கு தகவல் சொல்லவும், போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. விரைந்து வந்த போலீசார் தனலெட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவத்தினால் கல்லூரியில் வேலை பார்க்கும் பிற பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். 

இந்நிலையில், உடனடியாக கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு, மாணவிகள் வீட்டுக்கு அனுப்பட்டனர். தற்கொலைக்கு காரணம் என்ன, எதற்காக தனலட்சுமி தற்கொலை செய்துக்கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை.. இது சம்பந்தமான விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.