கடந்த ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்தாது அப்பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு தற்போதைய புதிய ஜகாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருகின்றமை வரவேட்கதக்க விடயம்.

என பாராளுமன்று உறுப்பினர் இராதாகிருஸ்ணன் மஸ்கெலியா கவரவில தோட்டத்தில் இடம் பெற்ற அடிக்கல் நிகழ்வின் போது தெரிவித்தார்.

இதன் போது மேலும் கூறுகையில்,

ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னரும் இப்பாலத்திற்கான பணிகளை முன்னெடுக்க கிடைத்தமையையொட்டி மகிழ்ச்சியாகவுள்ளது.

இப்பாலத்தினை புனரமைப்பு செய்வதன் மூலம் சுமார் 8000 குடும்பங்களை சேர்ந்த 12000 ற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயனடையவுள்ளதுடன் பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இப்பாலம் காணப்படுவதனால் குறித்த பாலத்தை மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் இப்பணிகளை நிறைவு செய்வதாக தெரிவித்தார்.

அத்துடன் மக்களுக்கு பயனடையும் எவ்வித வேலைத்திட்டங்களை புதிய அரசு அல்லது முன்னைய அரசு முன்னெடுக்கும் எனில் நாம் ஆதரவை வழங்க தயாராக உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.