வடக்கில் இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த 400 ஏக்கர் பரப்பளவுடைய மக்களுக்கு சொந்தமான காணியினை மீளவும் பொதுமக்களிடத்தில் கையளிக்க தீர்மானித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தெல்லிப்பளை பிரதேசத்தில் 200 ஏக்கர் அளவிலான காணிகள் விடுவிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததிலிருந்து வடக்கில் 2,175.5 ஏக்கர் காணியும், கிழக்கில் 1,055 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டு மக்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறையில் 65 ஹெக்டேயர் வரையிலான காணிகள் மீள்குடியேற்றத்திற்காக இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதியில் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுத்து வரப்படுகின்றன.

குறித்த மீள்குடியேற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.