(நா.தனுஜா)

பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். எனினும் வேட்பாளர் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அலைக்கழிக்கப்பட்டதைப் போன்ற சந்தர்ப்பத்தை மீண்டும் எதிர்கொள்வதற்கு நான் தயாரில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன் தற்போது மக்கள் வழங்கிய ஆணையை மையப்படுத்தி உரிய தீர்ப்பை வழங்குங்கள். அதற்கேற்ப ஆளுந்தரப்பு தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு உரிய அழுத்தங்களை வழங்கி, ஒரு பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

கம்பஹா மாவட்டத்தின் தொம்பே தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் இல்லத்தில் இன்று பொதுமக்களுக்கு நன்றிகூறும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.