(இரா­ஜ­துரை ஹஷான்)

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அர­சியல் பழி­வாங்­க­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட இரா­ணு­வத்­தினர் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் அனை­வ­ருக்கும் காணி உறு­திப்­பத்­தி­ரத்­துடன் இல­வ­ச­மாக காணி வழங்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது என காணி இரா­ஜாங்க அமைச்சர் எஸ். பி. திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் தலைமைக் காரி­யா­ல­யத்தில்  நேற்று  முன்­தினம் திங்­கட்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இடைக்­கால அர­சாங்கம் தற் ­போது முறை­யான கொள்கைத் திட்­டங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நிர்­வா­கத்­தினை முன்­னெ­டுத்து செல்­கின்­றது.  காணி தொடர்பில் தற்­போது எழுந்­துள்ள பல பிரச்­சி­னை­க­ளுக்கு துரி­த­க­ர­மான முறையில் தீர்வு பெற்றுக்கொடுக்­கப்­படும்.

தலை­நகர் கொழும்பில் அரச காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்டு அதில் குடி­யி­ருப்­புக்­களை அமைத்­துள்ள பொது­மக்கள் தொடர்பில்  கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.   முறை­யான  வச­தி­க­ளுடன்   வீடு­களை நிர்­மா­ணித்துக் கொடுக்கும்படி உரிய அமைச்­சுக்கு பணிப்­புரை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த அர­சாங்­கத்தில் அர­சியல் பழி­வாங்­க­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட இரா­ணு­வத்­தி­ன­ருக்கு நீதியும் நிவா­ர­ணமும் வழங்­கப்­படும்.  இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் இல­வச காணி வழங்­கப்­படும். 

ஊட­க­வி­ய­லா­ளர்கள் எந்த நிறு­வ­னத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­பது தொடர்பில் கவனம் செலுத்­தப்­ப­ட­மாட்­டாது. மாறாக வழங்கப்படும் சேவைக்கு முக்கியத்துவம் செலுத்தப்படும். ஊடகவியலாளர்கள் எப்பிரதேசத்தில் தமக்கான காணி தேவை என்பதை தெரிவு செய்து கொள்ள முடியும் என்றார்.