இலங்கையின் அரச துறையை சக்திமயப்படுத்த உலக வங்கி 25 மில்லியன் டொலர் கடன் உதவிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் பொது நன்மைக்கான செயற்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்தும் வகையிலேயே உலக வங்கி இக் கடன் உதவியை வழங்க முடிவு செய்துள்ளது.

அத்தோடு பொது விடயங்களில் முன்னெடுக்கப்படும் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதே இதன் நோக்கம் என உலக வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.