புத்திசாலித்தனமான செயற்பாடுகளும் கடின உழைப்புடனும் யாழ்.மாவட்டத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அதிகார சபை அங்குரார்ப்பண நிகழ்வு முடிவடைந்த பின்னர் , மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் பழிவாங்கல்கள் இல்லாமல் , எந்த வித அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் இன்றி , வேறுபாடுகள் இன்றி அபிவிருத்தியை இலக்காக கொண்டு செயற்படுவோம்.

எனவே எமது மாவட்டத்தை கட்டியெழுப்ப புத்திசாலித்தனமாக செயற்பாட்டுடன், கடின உழைப்புடன் தொழிற்படுவோம்.

எங்கள் பிரதேச மக்கள் தங்கள் குறைகளை , பிரச்சனைகளை எங்கே போய் சொல்வது என்று தெரியாமல் இருந்தார்கள்.

இனிவரும் காலங்களில் திங்கள், வெள்ளி ஆகிய நாட்களில் எமது இந்த அலுவலகத்திற்கு வந்து தங்கள் குறைகளை பிரச்சனைகளை கூறலாம். 

புதன் கிழமைகளில் பொதுமக்கள் தினமாக ஒதுக்கி அன்றைய தினம் நான் அலுவலகத்தில் இருந்து மக்களின் பிரச்சனைகளை கேட்டறிவதுடன், அவற்றை விரைந்து தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.