(இராஜதுரை ஹஷான்)

இனப்பிரச்சினை என்ற இல்லாத ஒன்றை இருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார்கள். அதிகார பகிர்வு  என்பது மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஒரு செயற்பாடு தேவையற்ற விடயங்களுக்கு ஒருபோதும் அரசாங்கம்  கவனம் செலுத்தாது என நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இனப்பிரச்சினை என்று குறிப்பிட்டுக் கொண்டு கூட்டமைப்பினர்  இனங்களுக்கிடையில் பிரச்சினையை தோற்றுவிக்கின்றார்கள். வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்திற்கு முழுமையான அபிவிருத்தி முன்னெடுக்கப்படும். இதில் எவ்வித மாற்று கருத்துக்களும் கிடையாது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேவையற்ற விடயங்களுக்கு ஒருபோதும் முக்கியத்துவம் செலுத்தமாட்டார். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தீர்வு காணப்பட வேண்டிய அடிப்படை பிரச்சினைகள் பல காணப்படுகின்றன. தம்மை தெரிவு செய்த மக்களின் தேவைகளை உணர்ந்து கூட்டமைப்பினர் அரசியலில் செல்வாக்கு செலுத்தவில்லை. தெற்கில் முன்னெடுக்கும் அபிவிருத்திகளை போன்று வடக்கிற்கும் அபிவிருத்தி பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என்றார்.