நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் சுமார் 6721 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம்காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு கடந்த இருவாரங்களாக டெங்கு நோயினால் பாதிப்படைந்து புத்தளத்தை சேர்ந்த 5 வயதுடைய குழந்தை நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இதேவேளை கடந்த 16 நாட்களில் மட்டும் டெங்கு நோயினால் பாதிப்படைந்த நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 6721 ஆக அதிகரித்துள்ளதனால் மக்கள் அவதானமாகவும், சுற்றுப்புற சுழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.