மரக்கறி வகைகளுக்கு தற்பொழுது நிலவும் விலை அதிகரிப்பு அடுத்த மாதம் ஜனவரி நடுப்பகுதி அளவில் குறைவடையக்கூடும் என்று ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருட இறுதியில் மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு இடம்பெறுவது பொதுவான செயற்பாடு ஆகும் என்று அதன் பணிப்பாளர் தமிந்த பிரியதர்ஸன தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதிலும் பல பிரதேசங்களில் மரக்கறி வகைகளின் விலை தற்பொழுது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.

இதேவேளை அரிசியின் விலை சமீபத்தில் அதிகரித்திருந்தது. இருப்பினும் நெல் ஆலை உரிமையாளர்களுடன் எட்டப்பட்ட உடன்பாட்டிற்கு அமைய அரிசியின் விலை ஓரளவிற்கு குறைவடைந்துள்ளது. தற்பொழுது அரிசிக்கான விலையுடன் கடந்த வருட விலையுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவாசாய அலுவல்கள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் இக் காலப்பகுதியில் ஒரு கிலே அரிசி 115 ரூபாவிற்கும் 120 ரூபாவிற்கும் இடையில் விற்பனை செய்யப்பட்டதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.