பனாமாவில் நேற்றைய தினம் சிறைக் கைதிகளுக்கு மத்தியில் இடம்பெற்ற பரஸ்பரச் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

பனாமாவின் தலைநகரிலிருந்து சுமார் 25 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஜொய்டா என்ற சிறைச்சாலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 5 கைத்துப்பாக்கிகள் உட்பட மேலும் பல துப்பாக்கிகளை பொலிஸார்  மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அந் நாட்டு ஜனாதிபதி லாரன்டினோ கோர்டிசோ (Laurentino Cortizo), மீட்கப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் சிறைக் காவலாளிகளின் உதவியுடனே சிறைச்சாலைக்குள் கொண்டு வந்திருக்க கூடும் என தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்த சம்பவம் தொடர்பில் பனாமா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.