பெற்றோர் கண்டித்ததை தாங்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறிய 15 வயது சிறுமியான காதலியை தனது தாயிடம் இளைஞனொருவர் ஒப்படைத்துள்ளார்.

 இச் சம்பவம் கொட்டவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

15 வயது பாடசாலை மாணவியொருவர் 22 வயது இளைஞனை காதலித்து வந்துள்ளார்.

இவ்விடயம் குறித்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தமையால் பெற்றோர் காதல் விவகாரத்தில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக குறித்த சிறுமியின் தாய் அவரை கடுமையாக கண்டித்தும் வந்துள்ளார்.

இதனை தனது காதலனுக்கு குறித்த சிறுமி தெரிவித்ததையடுத்து காதலன் நல்ல முடிவொன்றை எடுத்து, குறித்த சிறுமியை தன்னை வந்து சந்திக்குமாறு கூறியதுடன் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று தனது தாயாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனால் குறித்த சிறுமியின் தரப்பிலிருந்து இளைஞன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்பின், குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்ட பின்னர் குறித்த சிறுமியை அவரது தாயாரிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.