வவுனியாவை தளமாகக்கொண்டு இயங்கும் பத்திரிகை ஒன்றில் பிரதான செய்தியாளராக பணிபுரியும். ஊடகவியலாளர் கடந்தவருடம் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். 

வவுனியாவில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கும் வகையில் ஆவா குழு என்ற பெயரில் வீதிகளில் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்களை எடுத்துச்சென்று தனது நண்பர்களுக்கு காண்பித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் வழக்கு தவணைக்காக குறித்த ஊடகவியலாளர் வவுனியா நீதி மன்றில் ஆஜராகியிருந்தார். 

இந்நிலையில் எதிர்வரும் வருடம் ஜந்தாம் மாதம் 16 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது. ஊடகவியலாளர் சார்பாக சிரேஸ்ட சட்டதரணி தயாபரன் ஆஜராகியிருந்தார்.